சனிக்கிழமை, ஜனவரி 11, 2025

விஜய் லிஸ்டில் இருந்த அடுத்த கூட்டணி.. படத்தை பார்த்த பின் கல்தா கொடுத்து எஸ்கேப்

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில், நெல்சன் திலிப்குமார் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகி வரும் படம் பீஸ்ட். இப்படத்தின் இறுதிகட்ட வேலைகள் மும்முரமாக நடந்து வருகிறது. பீஸ்ட் படம் ஏப்ரல் 14ஆம் தேதி வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பீஸ்ட் படத்தை தொடர்ந்து விஜய் தெலுங்கு இயக்குனர் வம்சி பைடிபல்லி இயக்கத்தில் நடிக்க உள்ளார். தளபதி விஜய் இயக்குனர்களை தேர்வு செய்வதில் கில்லாடி. விஜய் நிறைய படங்களை பார்த்து விட்டு அலசி ஆராய்ந்து இயக்குனர்களை தேர்வு செய்வார்.

அப்படிதான் லோகேஷ் கனகராஜ் மற்றும் நெல்சன் திலீப்குமார் ஆகியோரை விஜய் தேர்வு செய்துள்ளார். அதனால்தான் சமீபகாலமாக விஜய் நடிப்பில் வெளியாகும் படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றதுடன் ப்ளாக்பஸ்டர் ஹிட்டாகி வசூல் சாதனை படைத்து வருகிறது.

அந்த லிஸ்டில் முக்கியமாக இருந்த இயக்குனர் ஹெச் வினோத். இவருடைய முதல் படமான சதுரங்க வேட்டை மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று இருந்தது. இவரின் தீரன் அதிகாரம் ஒன்று படத்தை பார்த்துவிட்டு விஜய் வினோத்தை தேர்வு செய்து வைத்துள்ளார்.

அதன்பின்பு வினோத், அஜித்துடன் இணைந்து நேர்கொண்ட பார்வை படத்தை இயக்கினார். இப்படம் மிகப்பெரிய வரவேற்பு பெற்றதால் மீண்டும் இதே கூட்டணியில் இணைந்து உருவான படம் வலிமை. இப்படம் வசூல் ரீதியாக நல்ல வரவேற்பை பெற்றாலும் சில எதிர்மறையான விமர்சனங்களும் வருகிறது.

இதனால் விஜய் வலிமை படத்தின் விமர்சனத்தை பார்த்தபின் ஹெச் வினோத்தை ஒதுங்கி வைத்திருப்பதாக தெரிகிறது. இந்நிலையில் ஹெச் வினோத் அஜித்தின் Ak61 படத்தை இயக்க உள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு மார்ச் 9ஆம் தேதி தொடங்க உள்ளதாக கூறப்படுகிறது.

Trending News