செவ்வாய்க்கிழமை, டிசம்பர் 24, 2024

விலங்கு பெயரில் வெளிவந்து மண்ணை கவ்விய விஜய்யின் 4 படங்கள்.. தலை தப்புமா லியோ!

வசூல் நாயகனாக திரையுலகினரால் கொண்டாடப்பட்டு வரும் விஜய் நடிப்பில் சமீப காலமாக வெளிவரும் படங்கள் கோடிக்கணக்கில் வசூல் வேட்டை நடத்தி வருகிறது. அதனாலேயே அவரை பலரும் பாக்ஸ் ஆபிஸ் கடவுளாகவே பார்த்து வருகின்றனர். அந்த வகையில் கடைசியாக அவர் நடிப்பில் வெளிவந்த வாரிசு கலவையான விமர்சனங்களை பெற்றாலும் வசூலில் சோடை போகவில்லை.

அதைத்தொடர்ந்து தற்போது அவர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் லியோ திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த பெயரை வைத்து தான் தற்போது ரசிகர்கள் புது பூகம்பத்தை கிளப்பியுள்ளனர். அதாவது விஜய்க்கு விலங்குகளின் பெயரை தலைப்பாக வைத்து வெளிவரும் படங்கள் பெரிய அளவில் வெற்றியை கொடுக்கவில்லை. இதற்கு உதாரணமாக நான்கு திரைப்படங்களை சொல்லலாம்.

குருவி தரணி இயக்கத்தில் கடந்த 2008 ஆம் ஆண்டு விஜய், திரிஷா, விவேக் ஆகியோர் நடிப்பில் இப்படம் வெளிவந்தது. உதயநிதி ஸ்டாலின் தயாரித்திருந்த இந்த திரைப்படம் ரசிகர்களால் ரசிக்கப்பட்டாலும் வசூலில் பெரிய அளவு சாதனை புரியவில்லை. அந்த வகையில் இப்படம் விஜய்க்கு ஒரு தோல்வி படமாகவே இருக்கிறது.

Also read:  டைட்டில வச்சே பல நூறு கோடி கல்லா கட்டிய லோகேஷின் லியோ.. இந்திய அளவில் எதிர்பார்க்கும் மொத்த வசூல்

சுறா எஸ் பி ராஜ்குமார் இயக்கத்தில் விஜய், தமன்னா, வடிவேலு உள்ளிட்ட பலர் நடித்திருந்த இப்படம் கடந்த 2010 ஆம் ஆண்டு வெளிவந்தது. மிகப்பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருந்த இந்த திரைப்படம் விஜய்யின் திரை வாழ்வில் மோசமான படம் என்ற பெயரை பெற்றது. மேலும் ரசிகர்களால் அதிகம் கலாய்க்கப்பட்ட படமாகவும் இது இருக்கிறது.

புலி சிம்பு தேவன் இயக்கத்தில் விஜய், ஸ்ருதிஹாசன், ஸ்ரீதேவி, சுதீப் உள்ளிட்ட முக்கிய பிரபலங்கள் நடித்த இந்த திரைப்படம் கடந்த 2015 ஆம் ஆண்டு வெளிவந்தது. இதில் விஜய் மாறுபட்ட கதாபாத்திரத்தை ஏற்றுள்ளார் என்ற காரணத்தினாலேயே இப்படம் மிகப்பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருந்தது. ஆனால் படம் வெளியான பிறகு மோசமான விமர்சனங்களை சந்தித்தது. மேலும் படமும் வசூல் ரீதியாக தோல்வி அடைந்தது.

Also read: உறைய வைக்கும் பனியில் உழைக்கும் லியோ டீம்.. காஷ்மீருக்கு கும்பிடு போட்டு வந்த மிஷ்கின் அறிக்கை

பீஸ்ட் கடந்த வருடம் நெல்சன் இயக்கத்தில் விஜய், பூஜா ஹெக்டே உள்ளிட்ட பலர் நடிப்பில் இப்படம் வெளிவந்தது. இதன் போஸ்டர், ட்ரெய்லர் என அனைத்தும் ரசிகர்களை கவர்ந்த நிலையில் படம் வெளியாகி பல நெகட்டிவ் விமர்சனங்களை சந்தித்தது. இதனால் படம் படுதோல்வி என்று பேசப்பட்டு வந்தது. ஆனால் தயாரிப்பு நிர்வாகம் படத்தின் வசூல் லாபம் தான் என்று அறிவித்திருந்தது. இருந்தாலும் விஜய்க்கு இப்படம் ஒரு சறுக்களை கொடுத்தது தான் உண்மை.

இப்படி விலங்குகளின் பெயரை தலைப்பாக வைத்து விஜய் நடித்த படங்கள் அனைத்தும் தோல்வியை சந்தித்துள்ளது. அதன் காரணமாகவே லியோ திரைப்படத்தின் தலைப்பை பார்த்து விஜய் ரசிகர்கள் பீதியில் இருக்கின்றனர். அந்த வகையில் இந்த ராசி படி லியோ தலை தப்புமா என்ற ஆர்வம் அனைவருக்கும் ஏற்பட்டுள்ளது.

Also read: வில்லன்களுக்கு பிளாஷ்பேக் வைத்த 5 படங்கள்.. தளபதிக்கு இணையாக கெத்து காட்டிய ‘பவானி’

Trending News