சனிக்கிழமை, ஜனவரி 18, 2025

ஒரே ட்ரெய்லர், பாட்டை வைத்து கல்லா கட்ட பக்கா பிளான்.. எதிர்பாராத வசூலை அள்ளும் கமலின் விக்ரம்

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசன், பகத் பாசில், விஜய் சேதுபதி மற்றும் பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் விக்ரம். இப்படத்தில் சிறப்பு தோற்றத்தில் சூர்யா நடித்துள்ளார். இப்படத்தை கமலின் ராஜ்கமல் பிலிம்ஸ் தயாரித்துள்ளது. இப்படம் வருகிற ஜூன் 3-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

விக்ரம் படத்தின் தமிழ்நாட்டு உரிமையை உதயநிதியின் ரெட் ஜெயன்ட் மூவிஸ் கைப்பற்றியுள்ளது. கமலஹாசனின் படம் நீண்ட இடைவெளிக்குப் பிறகு வருவதால் இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.

இப்படத்தில் இடம்பெற்ற பத்துதல பாடல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றிருந்தது. அதாவது இப்பாடலை கமலஹாசன் எழுதி அவரே பாடியிருந்தார். மேலும் சென்னை பாஷையில் உருவான இப்பாடல் யூடியூபில் பல சாதனைகள் படைத்து வருகிறது.

இந்நிலையில் சமீபத்தில் விக்ரம் படத்தின் ட்ரெய்லர் வெளியாகி ரசிகர் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்றிருந்தது. படத்தின் டிரைலரை பார்க்கும்போது கமலஹாசன் தற்போதும் இளைஞன் போலவே அதே எனர்ஜியுடன் இருப்பதை பார்த்து ரசிகர்கள் வியப்பில் ஆழ்ந்துள்ளனர்.

மேலும் விக்ரம் படத்தில் லோகேஷ் கனகராஜ் தரமான சம்பவம் செய்துள்ளார். இந்நிலையில் பத்துத்தல பாடல் மற்றும் டிரைலர் ஐ வைத்து பார்க்கும்போது விக்ரம் படம் தமிழ்நாட்டில் மட்டும் 100 கோடி வசூலை தாண்டும் என கூறப்படுகிறது.

அது மட்டுமல்லாமல் உலகம் முழுவதும் 200 கோடி வசூல் செய்யவுள்ளது. மேலும் கமலஹாசனின் திரைவாழ்க்கையில் விக்ரம் படம் ஒரு மைல் கல்லாக இருக்கும் என கருதப்படுகிறது. இப்படத்தை தொடர்ந்தால் கமலஹாசன் பல முன்னணி இயக்குனர்களின் படங்களில் நடிக்கயுள்ளார்.

Trending News