புதன்கிழமை, ஜனவரி 22, 2025

சம்பவத்திற்கு தயாரான விக்ரம், பா ரஞ்சித்.. கமலுக்கு கொடுக்கப் போகும் டஃப்

Actor Vikram: விக்ரம், பா.ரஞ்சித் கூட்டணியில் உருவாகும் தங்கலான் படத்திற்கு மிகப் பெரிய அளவில் எதிர்பார்ப்பு இருக்கிறது. இதுவரை சொல்லப்படாத ஒரு படைப்பாக உருவாகும் இப்படத்தில் மாளவிகா மோகனன், பசுபதி, பார்வதி உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.

விறுவிறுப்பாக நடைபெற்று வந்த இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது முடிவடைந்ததை அடுத்து பட குழு VFX வேலையில் தீவிரம் காட்ட ஆரம்பித்துள்ளனர். அந்த வகையில் படத்தை அடுத்த வருட பொங்கலுக்கு வெளியிடவும் தயாரிப்பு தரப்பு திட்டமிட்டு அதற்கான வேலையில் இறங்கி இருக்கிறது.

Also read: ஆங்கிலோ இந்தியன் கலக்கிய 5 படங்கள்.. சிவகார்த்திகேயனுடன் ஜோடி போட்ட ரசகுல்லா

இதன் மூலம் கமலுக்கு டஃப் கொடுக்கவும் அவர்கள் தயாராகி இருக்கின்றனர். ஏனென்றால் ஷங்கர் இயக்கத்தில் உலகநாயகன் நடித்துள்ள இந்தியன் 2 படம் அடுத்த வருட பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியாகும் என்று கூறப்படுகிறது. அதனால் இந்த இரண்டு படங்களுக்கும் சரியான போட்டி இருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.

மேலும் தங்கலான் படத்திற்காக கடுமையாக மெனக்கெட்டு வரும் பா.ரஞ்சித் பல திரைப்பட விழாக்கள் மற்றும் ஆஸ்கார் விருதுகளுக்கும் இதை அனுப்புவதற்கு திட்டமிட்டு இருக்கிறாராம். அந்த வகையில் விக்ரமின் திரை வாழ்வில் இப்படம் மிகப்பெரிய அளவில் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்குமாம்.

Also read: இந்தியன்-2 படம் பார்த்த பின் ஷங்கருக்கு பல லட்சம் பரிசு கொடுத்த கமல்.. இவ்ளோ காஸ்ட்லி வாட்சா.?

அந்த அளவுக்கு அவர் இதற்காக தன்னுடைய முழு அர்ப்பணிப்பை கொடுத்திருக்கிறார். மேக்கிங் வீடியோ, போஸ்டர் ஆகியவற்றை பார்க்கும் போதே படம் எந்த அளவுக்கு இருக்கும் என்பது தெளிவாக தெரிந்தது. மேலும் விக்ரம் இப்படத்தில் பணிபுரிந்தது பற்றியும், பா ரஞ்சித் இயக்கத்தை பற்றியும் தன் சோசியல் மீடியாவில் வெளிப்படையாக புகழ்ந்திருந்தார்.

அதிலும் 118 நாட்கள் எப்படி போனது என்றே தெரியவில்லை என கூறி இயக்குனருக்கு நன்றியும் தெரிவித்து இருந்தார். அந்த வகையில் கடைசியாக சில தோல்விகளை சந்தித்த விக்ரமுக்கு இப்படம் பெரும் நம்பிக்கையை கொடுத்திருக்கிறது. இதன் மூலம் தரமான ஒரு சம்பவத்தை நிகழ்த்த அவர் தயாராகி விட்டார்.

Also read: ப்ராஜெக்ட் கே-வால் பரிதவிக்கும் ஷங்கர்.. இந்தியன் 2 ரிலீசில் ஏற்பட்ட சிக்கல்

Trending News