திங்கட்கிழமை, டிசம்பர் 23, 2024

விக்ரமால் நடிக்க முடியாமல் திணறிய விக்ரம் பிரபு.. பொன்னியின் செல்வன் படப்பிடிப்பில் நடந்த சம்பவம்

மணிரத்தினத்தின் பொன்னியின் செல்வன் படத்தை இயக்கியுள்ளார். இப்படம் வருகின்ற செப்டம்பர் 30ஆம் தேதி சர்வதேச அளவில் வெளியாக உள்ளது. இந்நிலையில் பொன்னியின் செல்வன் படக்குழு தற்போது பிரம்மாண்டமாக தனது படத்தின் ப்ரோமோஷன் வேலைகளை செய்து வருகிறது.

மேலும் நாளுக்கு நாள் பொன்னியின் செல்வன் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்து வருகிறது. இந்நிலையில் இந்த படத்தைப் பற்றிய பல சுவாரசியமான செய்திகள் வெளியாகி ரசிகர்களுக்கு ஆச்சரியத்தை அளித்து வருகிறது. சோழர்களை மையமாகக் கொண்டு இப்படம் எடுக்கப்பட்டு உள்ளது.

Also Read :ஆண்டவரின் பாணியை பின்பற்றும் மணிரத்தினம்.. பொன்னியின் செல்வன் படத்தின் சக்சஸ் உறுதி தான்

இந்த படத்தில் திரைத்துறையைச் சார்ந்த பல முக்கியமான பிரபலங்கள் நடித்துள்ளனர். அதாவது அருள்மொழி வர்மன் ஆக ஜெயம் ரவி, குந்தவையாக திரிஷா, நந்தினியாக ஐஸ்வர்யா ராய் வந்திய தேவனாக கார்த்தி, பெரிய பழுவேட்டரையராக சரத்குமார் போன்றோர் நடித்துள்ளனர்.

பொன்னியின் செல்வன் படத்தில் ஆதித்த கரிகாலன் என்ற முக்கியமான கதாபாத்திரத்தில் விக்ரம் நடித்துள்ளார். அதேபோல் விக்ரம் பிரபு பல்லவன் பார்த்திபேந்திரன் என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்நிலையில் விக்ரம் மற்றும் விக்ரம் பிரபுவுக்கு இடையேயான காட்சிகள் இப்படத்தில் நிறைய உள்ளதாம்.

Also Read :மணிரத்தினத்தை வைத்து காய் நகர்த்திய சுஹாசினி.. வைரமுத்துவின் கேரியர் சோலி முடிஞ்சிருச்சு

இந்நிலையில் பொன்னியின் செல்வன் படப்பிடிப்பில் விக்ரமின் நடிப்பு மற்றும் வசனம் பேசுவதை பார்த்து விக்ரம் பிரபு அப்படியே திகைத்து திணறி போனாராம். மேலும் விக்ரமுடைய நடிப்பை பார்த்து சில வசனங்களை விக்ரம் பிரபு மறந்து விட்டாராம். அந்த அளவுக்கு அவரது நடிப்பு பிரம்மித்து போகும் அளவுக்கு இருந்ததாக விக்ரம் பிரபு கூறியுள்ளார்.

இந்நிலையில் பொன்னியின் செல்வன் படம் வெளியாக இன்னும் சில நாட்களை உள்ள நிலையில் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. மேலும் விரைவில் இப்படத்தை திரையில் காண பொன்னியின் செல்வன் வாசகர்கள் மற்றும் ரசிகர்கள் ஆர்வமாக உள்ளனர்.

Also Read :23 வருட சாபத்தை தும்சம் செய்யும் பொன்னியின் செல்வன்.. சாதனை படைக்கும் மணிரத்தினம்

Trending News