Cinemapettai
தமிழ் சினிமா மற்றும் செய்திகளின் தினசரி அப்டேட்ஸ்
ADVERTISEMENT

வாய்ப்பு கிடைத்தால் ரஜினி, கமலுக்கு வில்லனாக நடிப்பேன்.. மேடையில் ஓபனாக பேசிய முரட்டு நடிகர்

வாய்ப்பு கிடைத்தால் ரஜினி, கமலுக்கு வில்லனாக நடிப்பேன்.. மேடையில் ஓபனாக பேசிய முரட்டு நடிகர்

தற்போது ஹீரோ நடிகர்கள் வில்லனாக நடித்து வருவது தமிழ் சினிமாவில் டிரென்ட் ஆகியுள்ளது. அவ்வாறு ஹீரோவாக கலக்கி வந்த விஜய் சேதுபதி தற்போது வில்லனாக பல படங்களை மிரட்டி வருகிறார். இவர் மட்டுமன்றி அரவிந்த்சாமி, அருண் விஜய், வினய் […]

தற்போது ஹீரோ நடிகர்கள் வில்லனாக நடித்து வருவது தமிழ் சினிமாவில் டிரென்ட் ஆகியுள்ளது. அவ்வாறு ஹீரோவாக கலக்கி வந்த விஜய் சேதுபதி தற்போது வில்லனாக பல படங்களை மிரட்டி வருகிறார். இவர் மட்டுமன்றி அரவிந்த்சாமி, அருண் விஜய், வினய் போன்ற நடிகர்கள் தற்போது வில்லனாக நடித்து வருகிறார்கள்.

இந்நிலையில் அஜித்துக்கு வில்லனாக நடித்த நடிகர் தற்போது ரஜினி மற்றும் கமல் படத்தில் வில்லனாக நடிக்க வாய்ப்பு கிடைத்தால் மிகவும் மகிழ்ச்சி அடைவேன் என வெளிப்படையாக கூறியுள்ளார். அதற்காக தற்போது வரை காத்திருப்பதாகவும் ஒரு பேட்டியில் கூறியுள்ளார்.

என்னை அறிந்தால் படத்தில் அஜித்திற்கு வில்லனாக நடித்தவர் நடிகர் அருண்விஜய். ஆரம்பத்தில் இவருக்கு சரியான அங்கீகாரம் கிடைக்கவில்லை என்றாலும் தற்போது நல்ல கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். இதனால் இவர் படங்களுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.

தற்போது இயக்குனர் ஹரி இயக்கத்தில் யானை என்ற படத்தில் அருண்விஜய் நடித்து உள்ளார். இப்படத்தில் அவருக்கு ஜோடியாக பிரியா பவானி சங்கர் நடித்துள்ளார். சமுத்திரக்கனி, யோகி பாபு, இளவரசு ஆகியோர் இப்படத்தில் நடித்துள்ளனர் .இப்படம் வருகின்ற 17-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

இந்நிலையில் யானை படத்தின் பிரமோஷன் வேலைகள் மும்மரமாக நடந்து வருகிறது. ஒரு செய்தியாளர் சந்திப்பில் பேசிய அருண் விஜய் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் உலக நாயகன் கமலுடன் இணைந்து நடிக்கும் வாய்ப்பு கிடைத்தால் மிகவும் மகிழ்ச்சியாக இருப்பேன் என தனது விருப்பத்தைக் கூறியுள்ளார்.

விரைவில் இதற்கான முயற்சியில் அருண் விஜய் ஈடுபடயுள்ளார். மேலும் யானை படம் இவருக்கு மிகப் பெரிய திருப்புமுனையாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இப்படம் முழுக்க முழுக்க சென்டிமெண்ட் கலந்த ஆக்சன் படமாக வெளியாகயுள்ளது. இந்நிலையில் அருண் விஜய் ரசிகர்கள் யானை படத்திற்காக ஆர்வமாக காத்திருக்கின்றனர்.

A

Arun

அருண் – சினிமா மீடியா துறையில் 10 வருட அனுபவம் கொண்ட Content Writer. தமிழ் சினிமா, இந்திய சினிமா, OTT வெளியீடுகள், பாடல்கள், ரசிகர் நிகழ்வுகள் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளை எழுதி வருகிறார். வாசகர்களுக்கு சுவாரஸ்யமாகவும் நம்பகமாகவும் தகவல்களை வழங்குவது இவரின் சிறப்பு.