சிவகார்த்திகேயன் நடிப்பில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள படம் ‘சேயோன்’.கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் மற்றும் டர்மெரிக் மீடியா இணைந்து தயாரிக்கும் இப்படத்தை டைரக்டர் சிவகுமார் முருகேசன் இயக்கி வருகிறார்.
ஏற்கெனவே சிவகார்த்திகேயன் தயாரிப்பில் வெளியான ‘தாய் கிழவி’ படத்தின் மூலம் கவனம் ஈர்த்தவர் இவர்.இந்நிலையில்,‘சேயோன்’படப்பிடிப்பில் சிவகார்த்திகேயனுக்கும் டைரக்டர் சிவகுமார் முருகேசனுக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. குறிப்பாக,படத்தின் சீன்களை படமாக்கும் விதம்,தொழில்நுட்பக் கலைஞர்கள் தேர்வு மற்றும் பிரம்மாண்டமான மாஸ் காட்சிகள் தொடர்பாக இருவருக்கும் இடையே அதிருப்தி ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.
இந்த விவகாரத்தில் ராஜ்கமல் நிறுவனம் தலையிட்டு பிரச்சினையைச் சரிசெய்ததாகவும் சில மீடியாக்கள் தெரிவிக்கின்றன.சிவகார்த்திகேயன் அண்மையில் ரசிகர்களைச் சந்தித்தபோது, இனிவரும் படங்களில் முழுமையான மாஸ் எண்டர்டெயின்மென்ட்டுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்போவதாகத் தெரிவித்திருந்தார்.மேலும்,‘சேயோன்’ படத்தில் ஆக்ஷன் காட்சிகள் படமாக்கப்பட வேண்டியிருப்பதாகவும் கூறியிருந்தார்.
இப்படத்தில் பாக்யஸ்ரீ போர்ஸ்,ராஜ் பி ஷெட்டி, சீமான் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார்.இருப்பினும்,படப்பிடிப்பில் ஏற்பட்டதாகக் கூறப்படும் கருத்து வேறுபாடுகள் குறித்து படக்குழு இதுவரை அதிகாரப்பூர்வமாக எந்த விளக்கமும் அளிக்கவில்லை.இருப்பினும் ‘சேயோன்’படத்தின் அடுத்தடுத்த அறிவிப்புகளுக்காக ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.




