திங்கட்கிழமை, டிசம்பர் 23, 2024

கமல் பட ஹீரோயினுக்கு நடந்த கொடுமை.. நைட்டு எப்ப ஹீரோ கூப்பிட்டாலும் போகணும்

Kamal Movie Actress : கமல் பட ஹீரோயின் ஒருவர் தனக்கு நேர்ந்த கொடுமையை வெளிப்படையாக கூறி அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறார். பொதுவாக சினிமாவில் உள்ள கதாநாயகிகளுக்கு அட்ஜஸ்ட்மென்ட் டார்ச்சர் வருவதை கதாநாயகிகள் வெளிப்படையாக கூறி வரும் நிலையில் கமல் பட நடிகை இதுகுறித்து பேசி இருக்கிறார்.

அதாவது பாலிவுட்டில் பிரபல நடிகையான மல்லிகா ஷெராவத் கமலஹாசன் நடிப்பில் வெளியான தசாவதாரம் படத்தில் நடித்திருந்தாரர். அதேபோல் சிம்பு நடிப்பில் வெளியான ஒஸ்தி படத்திலும் ஒரு ஐட்டம் பாடலுக்கு நடனமாடி இருப்பார். உச்ச நட்சத்திரமாக இருக்கும் இவரே தனது வாழ்க்கையில் பல கொடுமைகளை சந்தித்து இருக்கிறாராம்.

அதாவது ஹீரோக்கள் இரவு ஒன்பது மணிக்கு வீட்டுக்கு வருமாறு போன் செய்து அழைப்பார்களாம். அப்போது நான் போக வேண்டும், அப்படி போகவில்லை என்றால் அந்த படத்தில் இருந்து நீக்கிவிடுவார்கள். இதனால் தான் பல பட வாய்ப்புகளை தவறவிட்டதாக மல்லிகா ஷெராவத் பேட்டி ஒன்றில் கூறி இருக்கிறார்.

Also Read : கமல் கைவிட்டாலும் எச்.வினோத்துக்கு அடித்த ஜாக்பாட்.. 51வது படத்திற்கு பிள்ளையார் சுழி போட்ட கேப்டன்

அதோடு படத்தில் குட்டையான ஆடைகள் அணிந்து, முத்த காட்சியில் நடிப்பதால் சிலர் தவறாக நடந்து கொள்ள முற்படுகிறார்கள். படத்தில் மட்டும் அப்படி நடிக்கும் நீங்கள் ஏன் என்னுடன் அவ்வாறு இருக்க முடியாது என கேட்பார்கள். இதனாலையே கிட்டத்தட்ட 50 படங்களுக்கு மேல் நான் நடிக்கவில்லை.

மேலும் திரையில் இவ்வாறு நடிப்பதால் சிலர் அட்வாண்டேஜ் எடுத்துக் கொள்கிறார்கள். நிஜ வாழ்க்கையிலும் இப்படி தான் இருப்பார்கள் என்ற எண்ணம் அவர்களுக்கு ஏற்படுகிறது. இது போன்ற பல பிரச்சனைகளை சந்தித்திருப்பதாக மனவேதனை உடன் மல்லிகா ஷெராவத் சொல்லி உள்ளார்.

Also Read : சென்டிமென்ட்டா வெற்றி பாதைக்கு ரூட் போட்ட கமல்.. அமரன்னு பெயர் வைக்க இதுதான் காரணம்

Trending News