Cinemapettai
தமிழ் சினிமா மற்றும் செய்திகளின் தினசரி அப்டேட்ஸ்
ADVERTISEMENT

கமல் பட ஹீரோயினுக்கு நடந்த கொடுமை.. நைட்டு எப்ப ஹீரோ கூப்பிட்டாலும் போகணும்

கமல் பட ஹீரோயினுக்கு நடந்த கொடுமை.. நைட்டு எப்ப ஹீரோ கூப்பிட்டாலும் போகணும்

Kamal Movie Actress : கமல் பட ஹீரோயின் ஒருவர் தனக்கு நேர்ந்த கொடுமையை வெளிப்படையாக கூறி அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறார். பொதுவாக சினிமாவில் உள்ள கதாநாயகிகளுக்கு அட்ஜஸ்ட்மென்ட் டார்ச்சர் வருவதை கதாநாயகிகள் வெளிப்படையாக கூறி வரும் நிலையில் […]

Kamal Movie Actress : கமல் பட ஹீரோயின் ஒருவர் தனக்கு நேர்ந்த கொடுமையை வெளிப்படையாக கூறி அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறார். பொதுவாக சினிமாவில் உள்ள கதாநாயகிகளுக்கு அட்ஜஸ்ட்மென்ட் டார்ச்சர் வருவதை கதாநாயகிகள் வெளிப்படையாக கூறி வரும் நிலையில் கமல் பட நடிகை இதுகுறித்து பேசி இருக்கிறார்.

அதாவது பாலிவுட்டில் பிரபல நடிகையான மல்லிகா ஷெராவத் கமலஹாசன் நடிப்பில் வெளியான தசாவதாரம் படத்தில் நடித்திருந்தாரர். அதேபோல் சிம்பு நடிப்பில் வெளியான ஒஸ்தி படத்திலும் ஒரு ஐட்டம் பாடலுக்கு நடனமாடி இருப்பார். உச்ச நட்சத்திரமாக இருக்கும் இவரே தனது வாழ்க்கையில் பல கொடுமைகளை சந்தித்து இருக்கிறாராம்.

அதாவது ஹீரோக்கள் இரவு ஒன்பது மணிக்கு வீட்டுக்கு வருமாறு போன் செய்து அழைப்பார்களாம். அப்போது நான் போக வேண்டும், அப்படி போகவில்லை என்றால் அந்த படத்தில் இருந்து நீக்கிவிடுவார்கள். இதனால் தான் பல பட வாய்ப்புகளை தவறவிட்டதாக மல்லிகா ஷெராவத் பேட்டி ஒன்றில் கூறி இருக்கிறார்.

அதோடு படத்தில் குட்டையான ஆடைகள் அணிந்து, முத்த காட்சியில் நடிப்பதால் சிலர் தவறாக நடந்து கொள்ள முற்படுகிறார்கள். படத்தில் மட்டும் அப்படி நடிக்கும் நீங்கள் ஏன் என்னுடன் அவ்வாறு இருக்க முடியாது என கேட்பார்கள். இதனாலையே கிட்டத்தட்ட 50 படங்களுக்கு மேல் நான் நடிக்கவில்லை.

மேலும் திரையில் இவ்வாறு நடிப்பதால் சிலர் அட்வாண்டேஜ் எடுத்துக் கொள்கிறார்கள். நிஜ வாழ்க்கையிலும் இப்படி தான் இருப்பார்கள் என்ற எண்ணம் அவர்களுக்கு ஏற்படுகிறது. இது போன்ற பல பிரச்சனைகளை சந்தித்திருப்பதாக மனவேதனை உடன் மல்லிகா ஷெராவத் சொல்லி உள்ளார்.

A

Arun

அருண் – சினிமா மீடியா துறையில் 10 வருட அனுபவம் கொண்ட Content Writer. தமிழ் சினிமா, இந்திய சினிமா, OTT வெளியீடுகள், பாடல்கள், ரசிகர் நிகழ்வுகள் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளை எழுதி வருகிறார். வாசகர்களுக்கு சுவாரஸ்யமாகவும் நம்பகமாகவும் தகவல்களை வழங்குவது இவரின் சிறப்பு.