திங்கட்கிழமை, டிசம்பர் 16, 2024

சக்கரை ரெடியானதும் மொய்க்கும் தேனீக்கள்.. விஜய் படத்தால் அட்வான்ஸை திரும்பி வாங்கிய அக்கட தேசம்

Actor Vijay: வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் பட்டைய கிளப்பி வரும் படம் தான் ஜெயிலர். இப்படத்தின் வெற்றியை கொண்டாடி வரும் வேலையில், விஜய் படத்தால் அட்வான்ஸை திரும்பி வாங்கிச் சென்ற அக்கட தேசம் குறித்த தகவலை இத்தொகுப்பில் காணலாம்.

வளர்ந்து வரும் இளம் இயக்குனர்களின் ஒருவரான நெல்சன் தற்போது ஜெயிலர் படத்தால் மார்க்கெட் உயர்ந்து காணப்பட்டு வருகிறார். 2018 கோலமாவு கோகிலா என்னும் படத்தில் இயக்குனராய் அறிமுகமானவர் நெல்சன். இவரின் பிளாக் காமெடி நிறைந்த இப்படம் மக்களிடையே நல்ல விமர்சனங்களை பெற்று தந்தது.

Also Read: 30 ஆண்டுகளில் ஷங்கரின் சொத்து.. இந்தியன்-2 சம்பளம் சேர்த்து 60 வயதில் இத்தனை கோடிக்கு அதிபதியா?

அதைத்தொடர்ந்து சிவகார்த்திகேயன் நடிப்பில் சுமார் 100 கோடி வசூல் கண்ட படம் தான் டாக்டர். இப்பாடத்தின் வெற்றியை கொண்டு விஜய் நடிப்பில் இவர் மேற்கொண்ட படம் தான் பீஸ்ட். பல எதிர்பார்ப்புகளை உள்ளடக்கிய இப்படம் விஜய் ரசிகர்கள் இடையே பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்தியது.

விஜய் படம் ஏற்கும் இவரை நம்பி அக்கடதேச இயக்குனர்களும் இவரிடம் பெரும் தொகையை அட்வான்ஸ் ஆக கொடுத்து வளைத்து போட்டனர். புகழின் உச்சியை தொட்ட இவரை தேனீக்கள் போல் சுத்தி வளைத்தவர்கள். விஜய் பட தோல்விக்கு பிறகு அட்வான்ஸை திரும்பி வாங்கிக் கொண்டு துண்ட காணும் துணிய காணும் என ஓடிவிட்டனர்.

Also Read: அப்பத்தாவின் வேற லெவல் என்ட்ரி.. குணசேகரனை கதறவிட்டு வேடிக்கை பார்க்கும் மருமகள்கள்

சினிமா வாழ்க்கை என்பது உச்சத்தில் இருக்கும் வரை தான் புகழும், வாய்ப்பும். உச்சத்தில் இருப்பவரையே ஒரு தோல்விக்கு பிறகு அப்படியே புரட்டி போட்டு விடும். அதற்கு உதாரணம் தான் நெல்சன். இவரை நம்பி மலை போல் இறங்கிய இயக்குனர்கள் விஜய் பட தோல்வியால் தெறித்து ஓடி விட்டனர்.

தற்பொழுது இவர் மேற்கொண்ட ஜெயிலர் பட வெற்றியை தொடர்ந்து, பல அக்கட தேச இயக்குனர்கள் இவருடன் இணைந்து படம் மேற்கொள்ள ஆர்வம் காட்டி வருகின்றனர். மேலும் புகழின் உச்சியில் இருக்கும் இவரை நம்பி பெருந்தொகையை இறைக்க தயாராகி வருகின்றனர்.

Also Read: லாஸ்லியா, அனிதா வரிசையில் களமிறங்கும் முதல் ஆண் நியூஸ் ரீடர்.. உறுதியானது பிக்பாஸின் 4ம் போட்டியாளர்

- Advertisement -

Trending News