Cinemapettai
தமிழ் சினிமா மற்றும் செய்திகளின் தினசரி அப்டேட்ஸ்
ADVERTISEMENT

எஸ் ஜே சூர்யாவின் பல வருட ஏக்கம்.. நிறைவேற்றுவாரா அஜித்.?

எஸ் ஜே சூர்யாவின் பல வருட ஏக்கம்.. நிறைவேற்றுவாரா அஜித்.?

Ajith: அஜித் இல்லை என்றால் எஸ் ஜே சூர்யா இல்லை. இதை அவரே பல முறை மேடைகளில் வெளிப்படையாக தெரிவித்துள்ளார். அஜித் சார் எனக்கு நிறைய உதவி செய்திருக்கிறார் என பழசை மறக்காமல் எஸ் ஜே சூர்யா கூறுவது […]

Ajith: அஜித் இல்லை என்றால் எஸ் ஜே சூர்யா இல்லை. இதை அவரே பல முறை மேடைகளில் வெளிப்படையாக தெரிவித்துள்ளார்.

அஜித் சார் எனக்கு நிறைய உதவி செய்திருக்கிறார் என பழசை மறக்காமல் எஸ் ஜே சூர்யா கூறுவது உண்டு. அதேபோல் அவர் ஹீரோவாக மாறியதற்கும் AK தான் காரணம்.

எப்படி என்றால் நியூ படம் ஆரம்பிக்கும் போது அஜித் தான் நடிப்பதாக இருந்தது. ஆனால் எஸ் ஜே சூர்யாவை பார்த்து அவர் நீங்களே ஹீரோவாக நடிங்க என்று சொன்னது தான் அவர் நடிப்பு அரக்கனாக மாறியதற்கு முக்கிய காரணம்.

நிறைவேற்றுவாரா அஜித்.?

தற்போது அனைத்து டாப் ஹீரோக்களுடனும் அவர் இணைந்து நடித்து விட்டார். ஆனால் அஜித்துடன் மட்டும் இணையவில்லை. அந்த ஏக்கம் எஸ் ஜே சூர்யாவிற்கு பல வருடமாக இருக்கிறது.

எப்படியாவது அஜித்தின் அடுத்த படத்தில் நடித்துவிட வேண்டும் என இப்போது அவர் தீவிரமாக முயற்சி செய்து வருகிறாராம். விரைவில் இது நிறைவேறும் என்கின்றனர்.

இருப்பினும் ஏகே இதற்கு மனது வைக்க வேண்டும். அதுவரை நடிப்பு அரக்கனும் இந்த முயற்சியை கைவிடுவதாக இல்லை. விரைவில் இந்த கூட்டணியை நாம் எதிர்பார்க்கலாம்.

V

Vijay

விஜய்- Cinemapettai நிறுவனர். 13 ஆண்டுகள் தமிழ் சினிமா செய்தி ஆசிரியர், டிஜிட்டல் மார்கெட்டிங் மற்றும் கன்டெண்ட் ஸ்ட்ராட்டஜியில் அனுபவம் கொண்டவர்.