வியாழக்கிழமை, ஜனவரி 16, 2025

வில்லங்கமான வைல்டு கார்டு போட்டியாளரை இறக்கிவிடும் பிக் பாஸ்.. சூடுபிடிக்கும் சிம்பு அல்டிமேட்

டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியை 70 நாள் வரை கொண்டு செல்ல பிக்பாஸ் குழு தற்போது முடிவெடுத்திருக்கிறது. மேலும் பிக்பாஸ் நிகழ்ச்சி இதுவரை தொகுத்து வழங்கிய உலகநாயகன் கமலஹாசன் கடந்த பிப்ரவரி 20ஆம் தேதி முதல் அந்த நிகழ்ச்சியில் இருந்து விலகுவதாக அறிக்கை வெளியிட்டார்.

அதன் பிறகு லிட்டில் சூப்பர் ஸ்டார் சிம்பு இந்த நிகழ்ச்சியை ஹோஸ்ட் செய்வதை உறுதிபடுத்தும் வகையில், நேற்று முன்தினம் சிம்பு பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் புரோமோ வெளியானது.

ஆகையால் இன்றைய நிகழ்ச்சியில் சிம்பு, பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் என்ட்ரி கொடுக்கும் உள்ள நிலையில், புதிதாக இரண்டு வைல்ட் கார்ட் போட்டியாளர்களாக ஏற்கனவே எலிமினேட் ஆன சுரேஷ் சக்கரவர்த்தி மற்றும் கேபிஒய் பிரபலம் சதீஷ் இருவரும் வருகை தர உள்ளனர்.

இவர்களுடன் ஏற்கனவே எலிமினேட் ஆன இரண்டு போட்டியாளர்கள் பிக்பாஸ் அல்டிமேட் வீட்டில் ஒரு வாரத்திற்கு தங்கி செல்ல மீண்டும் வரப் போகின்றனர். இவ்வாறு பரபரப்பான சம்பவங்கள் அடுத்தடுத்து நிகழக்கூடிய பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியின் இந்த வாரத்தில் எலிமினேஷன் நடைபெற வாய்ப்பு குறைவு.

ஒருவேளை அப்படி எலிமினேஷன் இருந்தால் தாடி பாலாஜி பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேற அதிக வாய்ப்பிருக்கிறது. எனவே இந்த வாரம் சிம்பு தொகுத்து வழங்கும் பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியை பார்ப்பதற்கு ரசிகர்கள் ஆர்வத்துடன் காத்திருக்கின்றனர்.

Trending News