வியாழக்கிழமை, ஜனவரி 23, 2025

ரிலீஸுக்கு முன்னரே 100 கோடிக்கு மேல் பிசினஸ்.. பாகுபலியை ஓரம்கட்டிய பொன்னியின் செல்வன்

இயக்குனர் மணிரத்தினத்தின் கனவு திரைப்படமான பொன்னியின் செல்வன், 500 கோடியில் பிரம்மாண்டமாக இரண்டு பாகங்களாக தயாராகிறது. எனவே வரலாற்று திரைப்படமான இந்தப் படத்தின் முதல் பாகம் செப்டம்பர் 30ம் தேதி ரிலீஸ் ஆவதால் ஒட்டுமொத்த திரையுலகமே பெரும் எதிர்பார்ப்பில் உள்ளது.

இந்த படத்தின் டிரெய்லர் நேற்று வெளியாகி ரசிகர்களின் எதிர்பார்ப்பை எகிற விட்டுள்ளது. இதில் ஜெயம் ரவி, கார்த்தி, விக்ரம், விக்ரம் பிரபு, பிரகாஷ்ராஜ், பார்த்திபன், பிரபு, ஜெயராம், ஐஸ்வர்யா ராய், திரிஷா, ஐஸ்வர்யா லட்சுமி, ரகுமான் என ஏகப்பட்ட திரை பிரபலங்கள் நடித்துள்ளனர்.

Also Read: சோழ ராஜ்யத்தை கண் முன் நிறுத்திய மணிரத்தினம்.. மிரளவிட்ட பொன்னின் செல்வன் ட்ரெய்லர்

இந்தப் படத்தை எடுப்பதற்கு பல வருடங்களாக யோசித்துக்கொண்டிருந்த மணிரத்னத்திற்கு ராஜமவுலியின் பாகுபலி படம் தான் வழிகாட்டுதலாக இருந்திருக்கிறது. தற்போது பாகுபலி படத்தையே மிஞ்சிய பொன்னியின் செல்வன் 2 சேட்டிலைட் உரிமையை பெற்ற திரையுலகையே வியந்து பார்க்க வைத்திருக்கிறது.

பாகுபலி படத்தின் முதல் பாகத்தை 41 கோடிக்கும். இரண்டாவது பாகத்தை 51 கோடிக்கும் தான் வாங்கினார்களாம். ஆனால் பொன்னியின் செல்வன் முதல் பாகம் மற்றும் இரண்டாம் பாகம் என இரண்டையும் சேர்த்து டிஜிட்டல் ரைட்ஸ்சை அமேசன் நிறுவனம் 125 கோடியை வாரிக் கொடுத்து வாங்கியுள்ளது.

Also Read: சூப்பர் ஸ்டார் ஆசைப்பட்ட பொன்னியின் செல்வன் கேரக்டர்.. வாய்ப்பு கேட்டும் கொடுக்க மறுத்த மணிரத்தினம்

மேலும் இந்த மாத இறுதியில் ரிலீஸ் ஆகும் பொன்னியின் செல்வன் படத்தின் முதல் பாகத்தில் சேட்டிலைட் உரிமையை சன் டிவி 101 கோடி கொடுத்து தன்வசப்படுத்தி இருக்கிறது. ரிலீசுக்கு முன்பே பொன்னியின் செல்வன் 100 கோடிக்கு மேல் பிசினஸ் செய்து வசூல் வேட்டையை இப்பவே ஆரம்பித்துள்ளது.

பாகுபலி படத்தைப் பார்த்த பிறகு தான் பொன்னியின் செல்வன் படம் உருவாகுவதற்கு ஒரு ஐடியா வந்ததாக மணிரத்தினம் கூறிய நிலையில், படத்தை உருவாக்குவதிலும் வியாபாரத்திலும் ராஜமவுலியையே தூக்கி சாப்பிட்டு விட்டார் மணிரத்தினம்.

Also Read: ரிலீசுக்கு முன்பே கல்லா கட்டிய பொன்னியின் செல்வன்.. RRR, KGF-ஐ ஓரங்கட்டிய மணிரத்னம்

Trending News