Cinemapettai
தமிழ் சினிமா மற்றும் செய்திகளின் தினசரி அப்டேட்ஸ்
ADVERTISEMENT

2025-ல் ஏமாற்றிய மூன்று படங்கள்.. மொக்கையான மணிரத்னம்-கமல் கூட்டணி

2025-ல் ஏமாற்றிய மூன்று படங்கள்.. மொக்கையான மணிரத்னம்-கமல் கூட்டணி

Kamal : 2025 ஆம் ஆண்டு பெரும் எதிர்பார்ப்புடன் வெளியாகி ரசிகர்களை மூன்று படங்கள் ஏமாற்றி இருக்கிறது. பொதுவாகவே இப்போது ரசிகர்கள் பிரம்மாண்ட தயாரிப்பைக் காட்டிலும் வலுவான கதையை தான் எதிர்பார்க்கின்றனர். படத்தில் பெரிய இயக்குனர் மற்றும் பெரிய […]

Kamal : 2025 ஆம் ஆண்டு பெரும் எதிர்பார்ப்புடன் வெளியாகி ரசிகர்களை மூன்று படங்கள் ஏமாற்றி இருக்கிறது. பொதுவாகவே இப்போது ரசிகர்கள் பிரம்மாண்ட தயாரிப்பைக் காட்டிலும் வலுவான கதையை தான் எதிர்பார்க்கின்றனர்.

படத்தில் பெரிய இயக்குனர் மற்றும் பெரிய நடிகர்கள் இருந்தாலும் கதை தரமாக இல்லாவிட்டால் தோல்வியை தான் பெறுகிறது. இதனால் பெரிய முதலீடு செய்து படு மோசமான தோல்வியை பல படங்கள் சந்தித்து வருகிறது. அந்த வகையில் இந்த வருடம் மொக்கை வாங்கிய மூன்று படங்களை பார்க்கலாம்.

முதலாவதாக அஜித்தின் விடாமுயற்சி படம் வெளியானது. அஜித்தின் பிடித்தமான கார் ரேஸை வைத்து இந்த படம் எடுக்கப்பட்டதால் ரசிகர்கள் எதிர்பார்ப்புடன் இருந்தனர். ஆனால் இந்த படம் பாக்ஸ் ஆபிஸில் படு மோசமான தோல்வியை சந்தித்தது.

2025 இல் எதிர்பார்ப்புடன் வெளியாகி மொக்கை வாங்கிய 3 படங்கள்

இதனால் தயாரிப்பு நிறுவனம் லைக்காவிற்கு நஷ்டம் ஏற்பட்டது. அடுத்ததாக சூர்யாவின் ரெட்ரோ படம் தான். கார்த்திக் சுப்புராஜ் டைரக்சன் என்பதால் கண்டிப்பாக வேற லெவலில் இருக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. இந்த படம் கலவையான விமர்சனத்தை தான் பெற்றது.

அடுத்ததாக மணிரத்னம் மற்றும் கமல் கூட்டணியில் உருவான தக் லைஃப் படம் தான். இந்த படத்தில் ஏஆர் ரகுமான் இசை, சிம்பு, திரிஷா, ஜோஜு ஜார்ஜ் பெரிய நட்சத்திர பட்டாளம் என எல்லாமே எதிர்பார்ப்புடன் தான் இருந்தது. ஆனால் திரைக்கதையில் பலவீனம் படத்திற்கு பெரிய அடியாக விழுந்தது.

அதன் பிறகு படத்தை ட்ரோல் செய்ய ஆரம்பித்து விட்டனர். படம் வெளியான இரண்டாவது நாளே பல தியேட்டர்களில் காற்று வாங்க தொடங்கியது. இதனால் வசூலும் பெரிய அளவில் பாதிக்கும் என்று கூறப்படுகிறது.

A

Arun

அருண் – சினிமா மீடியா துறையில் 10 வருட அனுபவம் கொண்ட Content Writer. தமிழ் சினிமா, இந்திய சினிமா, OTT வெளியீடுகள், பாடல்கள், ரசிகர் நிகழ்வுகள் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளை எழுதி வருகிறார். வாசகர்களுக்கு சுவாரஸ்யமாகவும் நம்பகமாகவும் தகவல்களை வழங்குவது இவரின் சிறப்பு.