வியாழக்கிழமை, ஜனவரி 23, 2025

படத்திற்காக குதிரை சவாரி பயிற்சி பெற்ற 4 பிரபலங்கள்.. வந்தியத்தேவனுக்கு டஃப் கொடுத்த 3 நடிகைகள்

சினிமாவைப் பொறுத்தவரையில் சில பிரபலங்கள் நடனம், நடிப்பு என பலவற்றிற்கு பயிற்சி எடுத்து தான் நடிக்க வருகிறார்கள். அதில் சிலர் தங்கள் நடிக்கும் கதாபாத்திரத்திற்கு ஏற்ற திறமையை வளர்த்துக் கொள்ள வேண்டிய கடமை உள்ளது. அந்த வகையில் தங்களது கதாபாத்திரத்திற்காக சில நடிகர், நடிகைகள் குதிரை சவாரி பயிற்சி பெற்றுள்ளனர். அவ்வாறு குதிரை சவாரி பயிற்சி பெற்ற 4 பிரபலங்களை இப்போது பார்க்கலாம்.

கார்த்தி : நடிகர் கார்த்தி தற்போது மணிரத்தினத்தின் பொன்னியின் செல்வன் படத்தில் நடித்துள்ளார். இதில் அவர் வந்தியத்தேவன் என்ற முக்கியமான கதாபாத்திரத்தை ஏற்று நடிக்கிறார். முதலாவதாக காஷ்மோரா என்ற படத்திற்காக கார்த்தி குதிரை சவாரி கற்றுக் கொண்டார். இப்போது பொன்னியின் செல்வன் படத்திலும் கார்த்தி குதிரையில் வரும் காட்சிகள் இடம் பெற்று இருந்தது.

karthi

Also Read :கார்த்தி, மணிரத்னத்துடன் உதவி இயக்குனராக வேலை செய்த 3 படங்கள்.. அசால்டாக சமாளிக்கும் வந்தயத்தேவன்

திரிஷா : திரிஷா பொன்னியின் செல்வன் படத்தில் இளவரசி குந்தவையாக நடித்திருந்தார். இந்தப் படத்தில் குதிரை சவாரி காட்சிகள் இடம்பெறும் என்பதால் 2020 இல் ஒரு இன்ஸ்டிடியூஷனில் சேர்ந்த இதற்கான பயிற்சியைப் பெற்றார். மேலும் தனது சமூக வலைத்தளத்தில் குதிரை சவாரி செய்யும் புகைப்படத்தையும் வெளியிட்டு இருந்தார்.

trisha
trisha

காஜல் அகர்வால் : ஷங்கர் இயக்கத்தில் கமலஹாசன் நடிப்பில் உருவாகி வரும் இந்தியன் 2 படத்தில் காஜல் அகர்வால் ஒப்பந்தமாகி இருந்தார். அதன்பின்பு காஜல் அகர்வால் கர்ப்பமானதால் பிரசவத்திற்கு பிறகு 4 மாதங்கள் கழித்து மீண்டும் இந்தியன் 2 படப்பிடிப்பில் கலந்து கொண்டுள்ளார். இந்த படத்திற்காக காஜல் அகர்வால் குதிரை சவாரி பயிற்சி பெற்றார்.

kajal-aggarwal

Also Read :படத்தில் தான் மார்க்கெட் இல்லை, நாங்க அதுல சம்பாதிப்போம்.. கோடி கோடியாய் சம்பாதிக்கும் காஜல், த்ரிஷா

தமன்னா : ராஜமவுலி இயக்கத்தில் வெளியான பாகுபலி படத்தில் அவந்திகா என்ற துணிச்சலான பெண் கதாபாத்திரத்தில் தமன்னா நடித்திருந்தார். இந்த படத்திற்காக இவர் குதிரை சவாரி மற்றும் வாள் வீச்சி சண்டை போன்றவற்றை கற்றுக் கொண்டார். தமன்னாவுக்கு சில நடிகைகளும் இதற்காக பயிற்சி அளித்து இருந்தனர்.

tamannaah

Also Read :வித்தியாசமான புடவையில் மஜாவாக போஸ் கொடுத்த தமன்னா.. வைரலாகும் போட்டோ ஷூட்

Trending News