இந்த வருடம் அக்டோபர் 24 ஆம் தேதி உலகெங்கும் தீபாவளி பண்டிகையை கொண்டாடுவதற்கு அனைவரும் அதை சிறப்பாக கொண்டாட வேண்டும் என்று ஆயத்தமாகிக் கொண்டிருக்கின்றனர். இதற்காக அன்றைய தினத்தில் சின்னத்திரையில் முன்னணி நடிகர்களின் சூப்பர் ஹிட் படங்கள் திரையிடப்பட்டு தங்களது டிஆர்பி ரேட்டிங்கை எகிர விடுவது மட்டுமல்லாமல் ரசிகர்களையும் குதூகலப் படுத்துவார்கள்.
அப்படி இந்த வருடம் தீபாவளி சூப்பர் ஹிட் அடித்த 5 படங்கள் சின்ன திரையில் ஒளிபரப்பாகிறது. ஆனால் இந்த லிஸ்டில் சூப்பர் ஸ்டார் படம் இல்லாததுதான் சிலருக்கு வருத்தம் அளிக்கிறது. இன்னிலையில் முன்னணி சேனல்களான சன் டிவி, விஜய் டிவி, ஜீ தமிழ், கலைஞர் டிவி போன்ற தொலைக்காட்சிகளில் என்ன படம் தீபாவளிக்கு ஒளிபரப்ப போகின்றனர் என்ற விபரம் தற்போது வெளியாகி இணையத்தில் கலக்கிக்கொண்டு இருக்கிறது.
சன் டிவி: இந்த வருடம் தளபதி விஜய்யின் நடிப்பில் ஏப்ரல் மாதம் ரிலீஸ் ஆன பீஸ்ட் படம்தான் சன் டிவியில் ஒளிபரப்புகிறது. படம் ரிலீஸ் ஆன சில மாதத்திலேயே சன் டிவியில் அதை ஒளிபரப்பு செய்வது ரசிகர்களிடம் மேலும் ஆர்வத்தை தூண்டியிருக்கிறது.
விஜய் டிவி: இந்த வருடம் கமல்ஹாசன் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான சூப்பர் ஹிட் படமான விக்ரம் திரைப்படம் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிறது. பாக்ஸ் ஆபிஸில் வசூல் சாதனை படைத்த இந்த படத்தை டிவியின் பார்ப்பதற்கு பலரும் ஆர்வத்துடன் எதிர்நோக்கி காத்திருக்கின்றனர்.
Also Read: அருள்மொழிவர்மனை வைத்து ப்ரோமோஷன்.. சன் டிவியை ஒழித்து கட்ட விஜய் டிவியின் பிரம்மாண்ட முயற்சி
ஜீ தமிழ்: ஆர்யா நடிப்பில் கடந்த மாதம் ரிலீஸ் ஆன கேப்டன் படம் அல்லது இந்தியத் திரை உலகை மிரட்டிய கேஜிஎப் 2 என்ற இரண்டு படங்களில் ஒரு படம் ஜீ தமிழில் ஒளிபரப்பாகும். இது குறித்த அறிவிப்பை இன்னும் இசைத்தமிழ் வெளியிடாததால் இன்னும் சில தினத்தில் இரண்டு படங்களில் எது என்பது தெரிந்துவிடும்.
கலைஞர் டிவி: இந்த வருடம் மே மாதம் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான டான் திரைப்படத்தை தான் கலைஞர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிறது. இந்த படம் பாக்ஸ் ஆபிசில் 100 கோடிக்கு மேல் வசூலை குவித்தது என்பது குறிப்பிடத்தக்கது.
ஆகையால் இந்த ஐந்து முன்னணி தொலைக்காட்சிகளில் சின்னத்திரை ரசிகர்களை கவரும் விதத்தில் சூப்பர் ஹிட்டடித்த படங்களைத் தேர்வு செய்து ஒளிப்பரப்புவதால் இதில் எதைப் பார்ப்பது என சின்னத்திரை ரசிகர்கள் குழப்பத்தில் உள்ளனர்.