Actor Kamal: பொதுவாக திரைப்படங்களில் ஹீரோக்களின் கதாபாத்திர பெயர்களை அப்படத்திற்கு டைட்டிலாக வைப்பார்கள். அவ்வாறு வெளிவந்த எத்தனையோ படங்களை நாம் பார்த்திருப்போம். ஆனால் ஹீரோக்களின் ஒரிஜினல் பெயர்களில் வெளிவந்த படங்களும் இருக்கிறது.
ஆனால் அப்படங்களில் அவர் ஹீரோவாக இல்லாமல் வேறு ஹீரோ நடித்திருப்பார். சுருக்கமாக சொல்லப்போனால் மாப்பிள்ளை அவர்தான் ஆனால் சட்டை என்னோடது என படையப்பா படத்தில் வரும் காமெடி கதை தான். அந்த வகையில் கமலின் நடிப்பில் மாபெரும் வெற்றி பெற்ற விக்ரம் படத்தில் நம்ம சீயான் விக்ரம் ஹீரோ கிடையாது.
Also read: வரப்போகுது பிக்பாஸ் சீசன் 7.. சண்டைக்கோழிகளாக சீறப்போகும் பிரபலங்களின் லிஸ்ட் இது தான்
இது ஒரு ஏமாற்றமாக இருந்தாலும் இப்போது கூகுளில் விக்ரம் என்ற பெயரை போட்டாலே ஆண்டவருடைய விக்ரம் படம் தான் முதலில் வருகிறது. அந்த வகையில் சீயான் இதன் மூலம் ஓரம் கட்டப்பட்டது கொஞ்சம் வருத்தமாக தான் இருக்கிறது. இந்த கவலை விக்ரமுக்கும் இப்போது இருக்கிறதாம்.
அதேபோன்று சூப்பர் ஸ்டார் நடிப்பில் வெளிவந்த படம் தான் தளபதி. ஆனால் அதில் நம்ம தளபதி விஜய் ஹீரோ கிடையாது. அந்த வரிசையில் விஜய் நடிப்பில் வெளிவந்த சச்சின் படத்தில் கிரிக்கெட் பிரபலம் சச்சின் ஒரு காட்சியில் கூட வரவில்லை.
அதேபோல் ஜீவா படத்தின் ஹீரோ விஷ்ணு விஷால் தான் ஜீவா கிடையாது.
Also read: 28 வருடங்களாக ஒதுங்கி இருந்த கமல்.. பாகுபலி நாயகனால் வந்த திடீர் மன மாற்றம்
மேலும் விஜய், திரிஷா நடிப்பில் வெளிவந்த ஆதி படத்தில் மிருகம் புகழ் ஆதி ஹீரோவாக நடிக்கவில்லை. இப்படி ஒரிஜினல் ஹீரோக்கள் இருக்கும் நிலையில் அவர்களின் பெயரை கடன் வாங்கி வேற ஹீரோக்கள் நடித்திருக்கின்றனர்.
இந்த வரிசையில் இன்னும் ஏராளமான படங்கள் இருக்கின்றன. இது கொஞ்சம் வேடிக்கையாக இருந்தாலும் ஒரு பக்கம் சிந்திக்கவும் வைக்கிறது. மற்ற ஹீரோக்கள் பெயர் எதற்கு டைட்டிலாக வைக்க வேண்டும் என்று கேட்காமல் நடித்த டாப் ஹீரோக்களையும் பாராட்ட வைக்கிறது.
Also read: கவுண்டமணியை ஒதுக்கிய ரஜினி, கமல்.. திருப்பி அடித்த கர்மா