வியாழக்கிழமை, ஜனவரி 23, 2025

2022-ல் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட 6 படங்கள்.. சர்வதேச அளவில் சாதனை படைத்த ஆண்டவர்

திரையுலகை பொருத்தவரையில் இந்த வருடம் சிலருக்கு அமோகமாகவும், சிலருக்கு கொஞ்சம் கவலையாகவும் சென்று இருக்கிறது. அதில் சில நடிகர்களின் படங்கள் எதிர்பார்த்த அளவுக்கு வெற்றியை கொடுக்கவில்லை. ஆனால் ஒரு சில திரைப்படங்கள் வரலாறு காணாத அளவுக்கு சாதனை படைத்தது. அந்த வகையில் இந்த வருடத்தில் ரசிகர்களை மிகப்பெரும் எதிர்பார்ப்பில் ஆழ்த்திய ஆறு திரைப்படங்களை பற்றி இங்கு காண்போம்.

ஆர்ஆர்ஆர் ராஜ மவுலி இயக்கத்தில் ராம்சரண், ஜூனியர் என்டிஆர், ஆலியா பட் உள்ளிட்ட ஏராளமான நட்சத்திரங்கள் நடித்திருந்த இந்த திரைப்படம் பிரம்மாண்ட பட்ஜெட்டில் தயாரானது. ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருந்த இந்த திரைப்படம் வசூலிலும் சோடை போகவில்லை.

Also read: தளபதி 67 க்கு அட்டகாசமாக ரெடியான விஜய்.. சோசியல் மீடியாவை கலக்கும் போட்டோ

கேஜிஎஃப் 2 கன்னட நடிகர் யாஷ் நடித்திருந்த இந்த திரைப்படம் உலக அளவில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருந்தது. ஏற்கனவே இந்த திரைப்படத்தின் முதல் பாகம் வெளிவந்து பல கோடி வசூலை வாரி குவித்தது. அதை தொடர்ந்து வெளியான இந்த இரண்டாம் பாகமும் பல மடங்கு வசூல் பெற்றது.

வலிமை வினோத் இயக்கத்தில் அஜித் நடிப்பில் வெளியான இந்த திரைப்படத்தை போனி கபூர் தயாரித்திருந்தார். பல ஆண்டுகளாக இழுத்துக் கொண்டே போன இந்த திரைப்படம் ரசிகர்களை மிகப்பெரிய அளவில் எதிர்பார்க்க வைத்தது. அந்த வகையில் இந்த திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றதோடு லாபகரமான வசூலையும் பெற்றது.

பீஸ்ட் நெல்சன் இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளிவந்த இந்த திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றது. மிகப்பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருந்த இந்த படத்தின் ட்ரைலரே படு மிரட்டலாக இருந்தது. அந்த வகையில் இப்படத்திற்கு சில நெகட்டிவ் விமர்சனங்கள் வந்தாலும் வசூலில் எந்த குறையும் இல்லை.

Also read: துணிவு படத்தில் பட்டையை கிளப்பிய மஞ்சு வாரியர்.. செல்லப் பெயர் வைத்த அஜித்

விக்ரம் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு கமல் நடிப்பில் வெளிவந்த இந்த திரைப்படம் இந்தியா மட்டுமல்லாமல் வெளிநாடுகளிலும் பட்டையை கிளப்பியது. தனக்கே உரிய பாணியில் அசத்தி இருந்த கமல் இந்த படத்தின் மூலம் பாக்ஸ் ஆபிஸையே தெறிக்க விட்டார். அந்த வகையில் உலக நாயகன் சர்வதேச அளவில் ஒரு சாதனையாளராக மாறியது குறிப்பிடத்தக்கது.

பொன்னியின் செல்வன் மணிரத்தினம் இயக்கத்தில் கார்த்தி, விக்ரம், ஜெயம் ரவி, திரிஷா, ஐஸ்வர்யா ராய் என மிகப் பெரும் நட்சத்திரக் கூட்டங்கள் நடித்திருந்த இந்த வரலாற்று காவியம் பல சாதனை படைத்தது. அதைத்தொடர்ந்து தற்போது இந்த படத்திற்கான இரண்டாம் பாகத்தையும் ரசிகர்கள் ஆர்வத்துடன் எதிர்பார்த்து வருகின்றனர்.

Also read: 47 நிமிடத்தில் ரஞ்சிதமே ரெக்கார்டை உடைத்த சில்லா சில்லா.. சபாஷ் சரியான போட்டி

Trending News