திங்கட்கிழமை, டிசம்பர் 23, 2024

தீபாவளி ரிலீஸ், அதிக எதிர்பார்ப்பை கிளப்பி, பல்ப் வாங்கிய 6 படங்கள்.. கமலை மிஞ்சிய ரஜினி

தீபாவளி என்றாலே பட்டாசுகளை விட அதிகமாக கொண்டாடப்படுவது அன்றைய நாளில் ரிலீஸ் ஆகும் திரைப்படங்கள் தான். வருடந்தோறும் தீபாவளிக்கு ரிலீஸ் ஆகும் படங்களின் மீது ரசிகர்களுக்கு ஒரு மிகப்பெரிய எதிர்பார்ப்பு உண்டு. அதிக படங்கள் இந்த எதிர்பார்ப்பை நிறைவேற்றி இருந்தாலும் ஒரு சில படங்கள் அதிக ஹைப்பை உருவாக்கி தோல்வியில் முடிந்து இருக்கின்றன. அதிக எதிர்பார்ப்பை கிளப்பி பிளாப் ஆன 6 தீபாவளி ரிலீஸ்களை தற்போது பார்க்கலாம்.

அண்ணாத்த: பொதுவாகவே ரஜினி படம் என்றால் ஒட்டுமொத்த சினிமா ரசிகர்களுக்கும் அதிக எதிர்பார்ப்பு இருக்கும். அதிலும் அண்ணாத்த திரைப்படம் தீபாவளி ரிலீஸ் என்பதால் ரொம்பவே எதிர்பார்க்கப்பட்டது. ரஜினியின் 90ஸ் ஹீரோயின்களான மீனா மற்றும் குஷ்பூ இந்த படத்தில் இருந்ததால் இன்னும் இந்த படத்தின் மீது அதிக ஹைப் சேர்ந்தது. ஆனால் இந்த திரைப்படம் ரஜினிக்கு ஒரு மிகப்பெரிய பிளாப் படமாக அமைந்துவிட்டது.

Also Read: அக்கட தேசம் வாரி வழங்கிய 5 பொக்கிஷமான நடிகர்கள்.. யாரும் அசைக்க முடியாத இடத்தில் சூப்பர் ஸ்டார்

தூங்காவனம்:மன்மதன் அம்பு திரைப்படத்தை தொடர்ந்து மீண்டும் கமல்-த்ரிஷா கூட்டணியில் உருவான படம் தூங்காவனம். இந்த படம் 2015 ஆம் ஆண்டு தீபாவளிக்கு ரிலீஸ் ஆனது. ஸ்லீப்லஸ் னைட் என்னும் படத்தின் தழுவலாக வந்த இந்த படம் அந்த அளவுக்கு வெற்றி பெறவில்லை. அந்த அளவிற்கு எதிர்பார்ப்பு இல்லாவிட்டாலும் படம் ரஜினியின் அண்ணாத்தயை பார்க்கும்போது எவ்வளவோ மேல் என்று கூறுகிறது கோலிவுட் வட்டாரம்.

காஷ்மோரா: ட்ரீம் வாரியர் தயாரித்து, ரௌத்திரம், இதற்குத்தானே பட்டாய் பாலகுமரா பட இயக்குனர் கோகுல் இயக்கிய படம் காஷ்மோரா. இந்த படத்தில் கார்த்தி, நயன்தாரா, ஸ்ரீதிவ்யா, சின்ன கலைவாணர் விவேக் ஆகியோர் நடித்திருந்தனர். காஷ்மோரா படத்தில் கார்த்தி 3 வேடங்களில் நடித்திருந்தார். ஆனால் இந்த படம் எதிர்பார்த்த வெற்றியை தரவில்லை.

Also Read: வாட்டர் கேனை பார்த்தாலே பதருமாம்.. கார்த்தியின் சர்தார் எப்படி இருக்கு.? முழு விமர்சனம்

ஆல் இன் ஆல் அழகுராஜா: சிவா மனசுல சக்தி, பாஸ் என்கிற பாஸ்கரன், ஒரு கல் ஒரு கண்ணாடி போன்ற வெற்றிப்படங்களை கொடுத்த இயக்குனர் ராஜேஷின் அடுத்த படம் தான் ஆல் இன் ஆல் அழகுராஜா. காமெடி படங்களில் வெற்றிப்பெற்ற ராஜேஷுக்கு யானைக்கும் அடி சறுக்கும் என்பது போல் அமைந்த படம் தான் ஆல் இன் ஆல் அழகுராஜா. காமெடியில் மட்டுமே கவனம் செலுத்தி திரைக்கதையில் கோட்டை விட்டதால் இந்த படம் பிளாப் ஆனது.

போடா போடி: இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கிய முதல் படம் போடா போடி. இளைஞர்களை கவரும் விதமாக அமைந்த காதல் கதை. இந்த படத்தில் சிலம்பரசன் மற்றும் வரலக்‌ஷ்மி சரத்குமார் நடித்திருந்தனர். விஜயின் துப்பாக்கி படத்துடன் ரிலீஸ் ஆனதால் அப்போது பெரிதாக பேசப்படவில்லை.

மயக்கம் என்ன: இயக்குனர் செல்வராகவன் இயக்கத்தில், தனுஷ் நடிப்பில், ஜி வி பிரகாஷ் இசையில் உருவான திரைப்படம் மயக்கம் என்ன. காதல் கொண்டேன், புதுப்பேட்டை வெற்றிகளை தொடர்ந்து உருவான படம் இது. பாடல்கள் ரசிக்கும்படி அமைந்து இருந்தாலும் படம் எதிர்ப்பார்த்த வெற்றியை பெறவில்லை.

Also Read: காலை வாரிவிட்ட பிரின்ஸ் படம்.. உச்சகட்ட பயத்தில் இருக்கும் விஜய், தனுஷ்

Trending News