செவ்வாய்க்கிழமை, நவம்பர் 19, 2024

கிளுகிளுப்பாக எழுதப்பட்ட 6 பாடல்கள்.. அதிர்ந்து போய் சென்சார் போர்டு கட் செய்த வரிகள்

சினிமாவில் பொதுவாக மக்கள் முகம் சுளிக்கும் வகையில் இருக்கும் வசனங்களும், காட்சிகளும் தணிக்கை குழுவால் நீக்கப்பட்டு விடும். அது போன்று அதிகமான வன்முறை காட்சிகள் இருந்தால் அந்தப் படங்களை சிறுவர்கள் பார்க்கக்கூடாது என்று தணிக்கை குழு சான்றிதழ் கொடுத்து விடும். ஒரு சில படங்களில் பாடல்களுக்கு கூட தணிக்கை குழு தடை விதித்திருக்கிறது. அப்படி தமிழ் சினிமாவில் நிறைய பாடல்கள் இருந்தாலும் இந்த ஆறு பாடல்கள் அதில் ரொம்பவும் முக்கியமானவை.

காற்று வெளியிடை: மணிரத்னம் இயக்கத்தில் கார்த்தி மற்றும் அதிதி ராவ் நடித்த திரைப்படம் காற்று வெளியிடை. இந்த படத்தில் வரும் சாரட்டு வண்டியில பாடல் மிகப்பெரிய அளவில் ஹிட் அடித்தது. இந்தப் பாடலை எழுதியவர் கவிப்பேரரசு வைரமுத்து. வைரமுத்து என்றாலே இது போன்ற வரிகளுக்கு பஞ்சம் இருக்காது. இந்தப் பாடலில் வரும் “ஆணுக்கோ அஞ்சு நிமிஷம் பொண்ணுக்கோ பத்து நிமிஷம்” என்னும் வரிகள் இரட்டை அர்த்தங்களுடன் அமைந்திருக்கும்.

Also Read:நடிகையின் வயதை பாடலில் சொன்ன கண்ணதாசன்.. கவிஞரால் ஹீரோயினுக்கு வந்த பிரச்சனை

அசல்: நடிகர் அஜித்குமாரை வைத்து காதல் மன்னன் மற்றும் அமர்க்களம் போன்ற படங்களை இயக்கிய இயக்குனர் சசி இயக்கிய திரைப்படம் தான் அசல். இந்த படத்தில் பாவனா மற்றும் சமீரா ரெட்டி நடித்திருப்பார்கள். அதில் பாவனாவிற்கும் அஜித்துக்கும் துஷ்யந்தா என்னும் டூயட் பாடல் அமைந்திருக்கும். அந்த பாடலில் “பூங்காவில் மழை வந்ததும் புதர் ஒன்று குடை ஆனதும் மழை வந்து நனைக்காமலே மடி மட்டும் நனைந்தாய் மறந்தது என்ன கதை என்ற வரியை” வைரமுத்து இரட்டை அர்த்தங்களுடன் எழுதி இருப்பார்.

சரோஜா: இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் வைபவ், பிரேம்ஜி, சிவா, காஜல் அகர்வால் ஆகியோர் நடித்த திரைப்படம் சரோஜா. இந்தப் படத்தில் கோடான கோடி என்னும் பாடல் வரும். இந்த பாடலில் “சிங்காரி நீ அழுத்திப்பிடி, கொடி ஏத்தி தூக்கிப்புடி”, என்ற இரட்டை அர்த்த வரிகள் இருக்கும்.

வருத்தபடாத வாலிபர் சங்கம்: இயக்குனர் பொன்ராம் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் மற்றும் சூரி சத்யராஜ் ஸ்ரீதிவ்யா நடித்த படம் வருத்தப்படாத வாலிபர் சங்கம் இந்த படம் மிகப்பெரிய அளவில் ஹிட் அடித்தது. இதில் ஊதா கலரு ரிப்பன் என்னும் பாடல் வரும். இதில் “மத்தவங்க அழகு எல்லாம் மொத்தல போரு போரு, சிங்காரி உன் அழகு தானே போதை ஏத்தும் பீரு பீரூ கிங்கு பிஷர் பீரு” என்ற பாடல் வரி தணிக்கை குழுவால் மாற்றப்பட்டது.

Also Read:அயலானுக்கும், வாடிவாசலுக்கும் இருக்கும் வித்தியாசம்.. பளபளப்பாக இருந்தாலும் போலி அசலாகுமா சிவா.?

ஒஸ்தி: சிம்பு, சந்தானம், ஜித்தன் ரமேஷ், நாசர், ரேவதி ஆகியோர் நடித்த படம் ஒஸ்தி. இந்த படத்தில் வடக்கே கேட்டுப்பாரு என்னும் ஒரு பாடல் வரும். இந்த பாடலை நீண்ட வருடங்களுக்கு பிறகு பிரபல பின்னணி பாடகி எல் ஆர் ஈஸ்வரி பாடியிருப்பார். அந்த வரிகள் “வடக்கே கேட்டுப்பாரு என்ன பத்தி சொல்லுவா ஜர்தா பீடா போல என் பேர தான் மெல்லுவான்” என கவிஞர் வாலி எழுதியிருந்தார். பின்பு அந்த வரிகள் தணிக்கை குழுவால் மாற்றப்பட்டது.

நண்பன்: இயக்குனர் சங்கர் இயக்கத்தில் தளபதி விஜய், ஸ்ரீகாந்த், ஜீவா ஆகியோர் நடித்த படம் நண்பன். இந்த படத்தில் அஸ்க் லஸ்கா என்னும் பாடல் வரும். “முக்கோணங்கள் படிப்பேன் உன் மூக்கின் மேலே விட்டம் மட்டும் படிப்பேன் உன் நெஞ்சின் மேலே மெல்லிடையோடு வளைகோடு நான் ஆகிறேன்” என்னும் இரட்டை அர்த்த வரியை கவிஞர் மதன் கார்க்கி எழுதி இருப்பார்.

Also Read:இந்த வருடம் வைரலான 3 ஹீரோக்களின் போட்டோஸ்.. ரஜினி, அஜித்தை ஓரம் கட்டிய விஜய்

- Advertisement -spot_img

Trending News