வெள்ளிக்கிழமை, ஜனவரி 24, 2025

7வது நாள் ஜெயிலரின் வசூல்.. விக்ரம் வசூலை முறியடித்து சாதனை, அள்ள அள்ள குறையாத கலாநிதியின் கஜானா

ரஜினியின் நடிப்பில் கடந்த வியாழக்கிழமை அன்று வெளியான ஜெயிலர் படத்தை பற்றிய பேச்சு தான் தற்போது வரை ஓயாமல் போய்க்கொண்டிருக்கிறது. சூப்பர் ஸ்டார் ரஜினி தரமான சம்பவத்தை இந்த படத்தில் இறக்கி இருக்கிறார். இப்படத்தின் மூலம் இயக்குனர் நெல்சனை தமிழ் சினிமா கொண்டாடி வருகிறது.

இந்நிலையில் சன் பிக்சர்ஸ் கலாநிதி மாறன் தான் ஜெயிலர் படத்தை தயாரித்திருந்தார். இதற்கு முன்னதாக ரஜினியின் படம் செய்த சாதனை அனைத்தையும் முறியடித்து வருகிறது ஜெயிலர் படம். அந்த வகையில் படம் வெளியாகி கிட்டத்தட்ட ஒரு வாரம் ஆகியும் திரையரங்குகள் முழுக்க ஹவுஸ்ஃபுல்லாக இருக்கிறது.

Also Read: புதுவரவான காமெடி வில்லனாக கலக்கும் மங்களம் சீனு.. ஜெயிலர் பட ப்ளாஸ்ட் மோகனுக்கு வரிசையில் நிற்கும் 4 படங்கள்

மேலும் ரஜினி ரசிகர்களின் ஆர்ப்பாட்டமும் குறைந்த பாடு இல்லை. ரஜினியின் ஜெயிலர் படம் வெளியாகி 7 நாட்களிலேயே கமலின் விக்ரம் பட சாதனையை முறியடித்து விட்டது. அதன்படி முதல் நாள் என்பதால் ஜெயிலர் படத்திற்கு அதிக எதிர்பார்ப்பு இருந்த நிலையில் 29.46 கோடி வசூல் செய்தது. அடுத்த நாள் 20.25 கோடி பெற்றது.

மேலும் மூன்றாவது நாள் 26.38 கோடி வசூல் செய்த நிலையில் ஞாயிற்றுக்கிழமை என்பதால் நான்காவது நாள் முடிவில் மட்டும் கிட்டத்தட்ட 31.04 கோடி வசூலை அள்ளி இருந்தது. மேலும் திங்கட்கிழமை வேலை நாட்கள் என்பதால் 15.70 கோடி மட்டும் வசூல் செய்தது. செவ்வாய்க்கிழமை சுகந்திர தினம் என்பதால் ஜெயிலர் வசூல் அன்று ஏற்றம் பெற்றது.

Also Read: 500 கோடி வடைக்கு தயாராகும் ஜெயிலர்.. அதிக வசூலால் வயிற்றெரிச்சலில் ப்ளூ சட்டை போட்ட வைரல் போஸ்ட்

அதன்படி ஆறாவது நாள் முடிவில் 24.85 கோடி வசூல் பெற்ற நிலையில் நேற்று ஏழாவது நாள் 11.34 கோடி வசூலை அள்ளியது. அந்த வகையில் தமிழ்நாட்டை பொறுத்தவரையில் கிட்டத்தட்ட 159.02 கோடி வசூல் பெற்றது. மேலும் உலக அளவில் கிட்டத்தட்ட 380 கோடி வசூலை வாரி குவித்துள்ளது என சன் பிக்சர்ஸ் அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது..

கமலின் விக்ரம் படம் ஒட்டுமொத்தமாக 450 கோடியை நெருங்கிய நிலையில் ஜெயிலர் பத்தே நாளில் அதை முறியடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் தொடர்ந்து படத்திற்கு வரவேற்பு அமோகமாக கிடைத்து வருவதால் விரைவில் 500 கோடியை நெருங்க இருக்கிறது. இதனால் கலாநிதிமாறனின் கஜானா அள்ள அள்ள குறையாமல் இருக்கிறதாம்.

Also Read: ஜெயிலர் வெற்றியால் பரபரப்பாகும் ரஜினியின் கால்ஷீட்.. 2024 பிப்ரவரிக்குள் 2 படத்தை ரிலீஸ் பண்ண போட்ட பிளான்

Trending News