தமிழ் சினிமாவில் பல ஹிட் படங்களை கொடுத்த தமிழ் நடிகர்களின் முதல் படங்களை பற்றி தற்போது பார்ப்போம்.
18 தமிழ் நடிகர்கள் அறிமுகமான முதல் படங்கள்
#1. பிரபு
பிரபு நடித்த முதல் படம் சங்கிலி. சிவாஜிகணேசன், ஸ்ரீபிரியா நடித்தனர். இந்தப் படத்திற்கு இளையராஜா, எம்.எஸ்.விஸ்வநாதன் இருவரும் இசையமைத்திருந்தனர். இந்த படம் சுமாரான வெற்றியை மட்டுமே பெற்றது.
#2. விஜயகாந்த்
விஜயகாந்த் நடித்த முதல் படம் இனிக்கும் இளமை. இந்த படத்தில் நடிகை ராதிகா, சுதாகர் நடித்திருந்தனர். இசையமைப்பாளர் சங்கர் கணேஷ். இந்த படம் சுமாராக ஓடியது.
#3. சத்யராஜ்
சத்யராஜ் நடித்த முதல் படம் சட்டம் என் கையில் இந்த படத்தில் சத்யராஜ் வில்லனாக நடித்தார். கமல்ஹாசன், ஸ்ரீபிரியா ஆகியோர் நடித்திருந்தனர். இந்த படத்திற்கு இசை இளையராஜா படம் நன்றாக ஓடியது.
#4. விஜய்
இளையதளபதி விஜய் சிறு வயதில் விஜயகாந்தின் ‘வெற்றி’ படத்தில் நடித்திருக்கிறார் இருந்தாலும் கதாநாயகனாக நடித்த முதல் படம் நாளைய தீர்ப்பு அந்தப் படத்தை அவருடைய தந்தை எஸ்ஏ சந்திரசேகர் இயக்கினார் படம் எதிர்பார்த்த அளவு ஓடவில்லை.
#5. அஜித் (தமிழில்)
அஜித் தமிழில் நடித்த முதல் படம் அமராவதி. இந்த படத்தில் சங்கவி கதாநாயகியாக நடித்தார். இசை பாலபாரதி படம் சுமாராக ஓடியது.
#6. ஜெயம் ரவி
ரவி நடித்த முதல் படம் ஜெயம் இந்த படத்திலிருந்துதான் அனைவராலும் ஜெயம் ரவி என அழைக்கப்பட்டார். இந்த படத்தை அவருடைய அண்ணன் ராஜா இயக்கிய படம் மாபெரும் வெற்றி பெற்றது.
#7. தனுஷ்
துள்ளுவதோ இளமை படத்தில் தனுஷ் அறிமுகமானார். இந்தப் படத்தை அவரது அண்ணன் செல்வராகவன் இயக்கினார். ஆனால் திரையில் அவருடைய தந்தை கஸ்தூரி ராஜாவின் பெயர் மட்டும் வரும். இந்த படத்தில் யுவன்ஷங்கர் ராஜா இசையமைப்பாளர். இந்த படம், பாடல் என அனைத்தும் நல்ல வெற்றியைப் பெற்றது.
#8. சரத்குமார்
சரத்குமார் நடித்த முதல் படம் கண் சிமிட்டும் நேரம். இந்த படத்தில் கார்த்திக் கதாநாயகனாகவும் அம்பிகா கதாநாயகியாக நடித்திருந்தார். இந்த படத்திற்கு இசை வி எஸ் நரசிம்மன். இந்த படம் வெற்றி பெற்றது.
#9. சிவகார்த்திகேயன்
தொலைக்காட்சிகளில் புகழ்பெற்ற சிவகார்த்திகேயன் நடித்த முதல் படம் மெரினா. இந்த படத்தை பாண்டிராஜ் டைரக்ட் செய்திருந்தார். bigg boss புகழ் ஓவியா இந்த படத்தில் நடித்தார். இந்த படம் அந்த அளவுக்கு வெற்றி பெறவில்லை.
#10. அர்ஜுன்
அர்ஜுன் நடித்த முதல் படம் நன்றி. இந்த படத்தில் கார்த்திக், நளினி நடித்திருப்பார்கள். இந்த படத்தை ராமநாராயணன் டைரக்ட் செய்தார். படம் சுமாரான வெற்றியைப் பெற்றது.
#11. அருண் விஜய்
அருண் விஜய் முதன்முதலில் அறிமுகமான படம் காத்திருந்த காதல். இந்த படத்தில் இவருக்கு ஜோடியாக சுவலட்சுமி நடித்திருந்தார். இந்தப்படம் மாபெரும் தோல்வி அடைந்தது.
#12. பிரசாந்த்
பிரசாந்த் முதலில் நடித்த படம் வைகாசி பொறந்தாச்சு இவருக்கு ஜோடியாக நடிகை காவேரி நடித்திருந்தார். இந்த படத்திற்கு தேவா இசையமைத்திருந்தார். ராதா பாரதி இயக்கிய இந்தப் படம் வெற்றி பெற்றது.
#13. சூர்யா
சூர்யா நடித்த முதல் படம் நேருக்கு நேர். இந்த படத்தை இயக்குனர் வசந்த் டைரக்ட் செய்திருந்தார். இந்த படத்தில் சூர்யாவுடன் சேர்ந்து இணைந்து விஜய் நடித்திருப்பார். சூர்யாவின் ஜோடியாக சிம்ரன் நடித்தார். தேவா இசை அமைத்திருப்பார் படம் நன்றாக ஓடியது.
#14. விக்ரம்
விக்ரம் நடித்த முதல் படம் என் காதல் கண்மணி. விக்ரமிற்கு ஜோடியாக நடிகை ரேகா நடித்திருப்பார். படம் தோல்வியைத் தழுவியது.
#15. அரவிந்த்சாமி
அரவிந்த்சாமி நடித்த முதல் படம் தளபதி. இந்த படத்தில் கலெக்டர் வேடத்தில் நடித்திருப்பார். இந்த படத்தின் நாயகன் ரஜினி. படம் மிகப் பெரிய வெற்றி பெற்றது.
#16. மாதவன்
மாதவன் நடித்த முதல் படம் அலைபாயுதே. இந்த படம் மணிரத்தினம் இயக்கத்தில் ஏ ஆர் ரஹ்மான் இசையில் வெளிவந்தது. இந்தப் படத்தின் பாடல் மற்றும் படம் என இரண்டு மெகா ஹிட்டாக அமைந்தது.
#17. ரஜினிகாந்த்
ரஜினிகாந்த் நடித்த முதல் படம் அபூர்வ ராகங்கள். இந்த படத்தில் அவர் கதாநாயகன் இல்லை கமலஹாசன் கதாநாயகன். ஆனால் இந்த படத்தில்தான் அறிமுகமானார். இந்தப் படத்தை கே.பாலச்சந்தர் இயக்கினார். படம் நல்ல வெற்றி பெற்றது.
#18. கமல்ஹாசன்
கமல் நடித்த முதல் படம் களத்தூர் கண்ணம்மா. சிவாஜிகணேசன், சாவித்திரி நடித்த இந்தப் படம் பெரும் வெற்றி பெற்றது. கமலஹாசனின் நடிப்பு நன்றாக பேசப்பட்டது. இந்தப்படத்தின் ‘அம்மாவும் நீயே’ பாடல் மிகப்பெரும் வெற்றி பெற்றது.
( கே.பாலச்சந்தர் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்த 7 படங்கள் )
( பிரபு குஷ்பு இணைந்து ஜோடியாக நடித்த 10 படங்கள் )