புதன்கிழமை, ஜனவரி 8, 2025

ஹீரோக்கள் கடைசியில் உயிரை விட்டு வெற்றி பெற்ற 6 படங்கள்.. ஆபரேஷன் சக்சஸ் ஆனா பேஷன்ட் இறந்துட்டாரு கதைதான்

தமிழ் சினிமாவில் கிளைமேக்ஸ் காட்சிகளில் நடிகர், நடிகைகள் இறந்து போய் வெற்றி பெற்ற படங்கள் நிறைய உள்ளது. அந்த வரிசையில் கிளைமேக்ஸில் ரசிகர்களை கண்கலங்க வைத்த காட்சிகள் மனதில் இன்றளவும் நீங்கா இடம்பிடித்தது என்றே கூறலாம்.

நாயகன்

மணிரத்தினத்தின் பிரம்மாண்ட இயக்கத்தில் கமல்ஹாசன், சரண்யா, கார்த்திகா நடிப்பில் 1987-ல் வெளிவந்த படம் நாயகன். தமிழ் சினிமாவில் கமலஹாசனுக்கு மாபெரும் அங்கீகாரம் கொடுத்த படம் நாயகன். நிஜமாக வாழ்ந்த வரதராஜன் முதலியார் என்பவரின் வாழ்க்கையை மையமாக வைத்து நாயகன் படம் எடுக்கப்பட்டது.

இந்த படத்தில் வேலு நாயக்கர் என்ற கதாபாத்திரம் மக்கள் மனதில் இன்றளவும் நீங்கா இடம் பிடித்து விட்டது. இசைஞானி இளையராஜா இந்த படத்தின் வெற்றிக்கு பெரும் உறுதுணையாக இருந்தார் என்றே கூறலாம். இந்த படத்தில் கமலஹாசன் மும்பையில் பெரிய தாதாவாக இருப்பார், தமிழ் சினிமாவில் கேங்ஸ்டர் படங்களில் நாயகன் முக்கியமான இடத்தைப் பிடித்தது என்றே கூறலாம் இந்த படத்தில் கமல்ஹாசனும் இறந்துவிடுவார்.

ரமணா

ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் விஜயகாந்த், சிம்ரன் நடிப்பில் 2002ல் வெளிவந்தது ரமணா, இந்த படத்திற்கு இசைஞானி இளையராஜா இசை அமைத்திருப்பார். அரசாங்கத்தில் நடக்கும் ஊழலை மையப்படுத்தி இந்த கதை அமைக்கப்பட்டிருக்கும், இந்திய அளவில் திரும்பி பார்க்க வைத்த படம் என்றே கூறலாம். இந்த படம் பிளாக்பஸ்டர் ஹிட் கொடுத்தது மட்டுமில்லாமல், பல விருதுகளையும் தட்டிச் சென்றது.

ramana

இந்த படத்தில் விஜயகாந்த் லஞ்சம் வாங்கும் அரசு ஊழியர்களை கடத்தி கொலை செய்வது போன்று அமைக்கப்பட்டிருக்கும். கடைசியாக தானாகவே தண்டனையை ஏற்றுக்கொண்டு சரணடைந்து, அவரை அரசாங்கம் தூக்கிலிட்டு விடும். கிளைமாக்ஸ் காட்சியில் பாவமன்னிப்பும் கொடுக்கும் அரசாங்கத்தின் ஆணையை நிராகரித்து நான் செய்த தண்டனைக்கு தூக்கிலிடுங்கள் என்று கூறிவிடுவார். இந்த கதாபாத்திரத்தின் கடைசி காட்சி மனதில் ஆழமாக பதிந்து விட்டது.

காதல் கொண்டேன்

செல்வராகவன் இயக்கத்தில் தனுஷ், சோனியா அகர்வால் நடிப்பில் 2003ல் வெளிவந்தது காதல் கொண்டேன். இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசை அமைத்துருப்பார். இந்த படத்தில் வினோத் என்ற கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் தனுஷ் அந்த கதாபாத்திரத்திரமாக வாழ்ந்து இருப்பார் என்றே கூறலாம்.

kadhal konden
kadhal konden

சோனியா அகர்வாலுக்காக தனுஷ் ஒரு சைக்கோவாக மாறி சில கொலைகளும் செய்துவிடுவார். இந்த படத்தின் கிளைமாக்ஸ் காட்சியில் தானாகவே உயிரை விட்டு ரசிகர்களில் கண்ணீர் வரவழைத்து விடுவார். தனுஷின் சினிமா வாழ்க்கையை திரும்பிப் பார்க்க வைத்த படம் காதல் கொண்டேன்.

சுப்ரமணியபுரம்

சசிக்குமார் இயக்கத்தில் ஜெய், சசிகுமார், சமுத்திரக்கனி, ஸ்வாதி போன்றவர்கள் நடிப்பில் பிரம்மாண்ட வெற்றி பெற்ற படம் சுப்ரமணியபுரம். 2008 ல் வெளிவந்து இன்றுடன் 12 வருடங்கள் ஆகிவிட்டது. கிராமத்தில் நடக்கும் காதல், துரோகம், நட்பு அனைத்தையும் மிக சுவாரசியமாக கதை களத்தில் செதுக்கி இருப்பார் சசிகுமார்.

தமிழ் சினிமாவை திரும்பி பார்க்க வைத்த படம் என்றே கூறலாம், இப்படத்தின் வெற்றியை வைத்து மலையாளம், கன்னடம் போன்ற மொழிகளில் ரீமேக் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. முழுக்க முழுக்க மதுரையில் உருவாக்கப்பட்ட படம் தான் சுப்பிரமணியபுரம். இந்த படத்தில் ஜெய் மற்றும் சசிகுமார் இறந்துவிடுவார்கள்.

காசுக்காக துரோகம் செய்யும் நண்பனாக கஞ்சா கருப்பு நடித்திருப்பார், இறுதியில் அவரையும் கொன்று விடுவார்கள்.

மைனா

பிரபுசாலமன் இயக்கத்தில் விதார்த், அமலாபால் நடிப்பில் 2010-ல் வெளிவந்த படம் மைனா. கிட்டத்தட்ட 5 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இந்த படம் 30 கோடி வரை வசூல் செய்தது குறிப்பிடத்தக்கது. மலைப்பகுதி கிராமத்தில் நடக்கும் காதல் கதையை மிக சுவாரஸ்யமாக ஒளிப்பதிவு செய்து இருப்பார்கள்.

mynaa

இந்த படத்தின் அனைத்து பாடல்களும் சூப்பர் ஹிட் ஆனது. இந்த படத்திற்கு D.இமான் இசையமைத்துருப்பார், இந்தப் படமும் பல விருதுகளை தட்டி சென்றது. இறுதி காட்சிகளில் மைனாவும் சுருலியும் இறந்து விடுவார்கள் ரசிகர்களை இந்த காட்சி கண் கலங்க வைத்தது என்றே கூறலாம்.

பருத்திவீரன்

அமீர் இயக்கத்தில் கார்த்திக், பிரியாமணி, சரவணன், பொன்வண்ணன் நடிப்பில் மாபெரும் வெற்றி பெற்ற படம் பருத்திவீரன். இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசை அமைத்திருப்பார். மதுரையை சுற்றியுள்ள பகுதிகளில் இந்த படமும் எடுக்கப்பட்டிருக்கும், கிட்டத்தட்ட 2 வருடங்களாக இந்த படம் எடுக்கப்பட்டதாம்.

paruthiveeran-rajinis-favorite-movie
paruthiveeran-rajinis-favorite-movie

பிரியாமணியின் கதாபாத்திரத்திற்காக நேஷனல் பிலிம் அவார்டு விருதை தட்டிச் சென்றார். முத்தழகு என்ற கதாபாத்திரம் இன்றளவும் ரசிகர் மனதில் நீங்கா இடம் பிடித்து விட்டது. பல விருதுகளையும் தட்டிச் சென்றது, கிட்டத்தட்ட ஒரு வருடங்களையும் தாண்டி இந்த படம் வெற்றிகரமாக ஓடியது குறிப்பிடத்தக்கது.

கார்த்தி பருத்திவீரன் என்ற கதாபாத்திரமாக நடித்திருப்பார், பிரியாமணி முத்தழகு என்ற கதாபாத்திரத்தில் நடித்திருப்பார். இவர்கள் இருவரும் இந்த படத்தின் கிளைமாக்ஸ் காட்சியில் இறந்து விடுவார்கள்.

இப்படி கிளைமாக்ஸ் காட்சிகளில் உயிரை விட்டு ரசிகர்களை கண் கலங்க வைத்து மாபெரும் வெற்றி பெற்ற படங்கள் தமிழ் சினிமாவில் நிறைய உள்ளது.

Trending News