விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான நெஞ்சம் மறப்பதில்லை மற்றும் ஆயுத எழுத்து ஆகிய சீரியலில் நடித்தவர் சரண்யா துராடி . இவர் கல்லூரியில் படிக்கும் போதே செய்திவாசிப்பாளர் ஆவதற்கான வாய்ப்பு கிடைத்ததை வைத்து கலைஞர் தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளராக பணியாற்றியுள்ளார்.
அதன்பிறகு ராஜ் தொலைக்காட்சி ,ஜீ தமிழ், புதிய தலைமுறை தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளராக பணியாற்றியுள்ளார். பின்பு நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியில் சீனியர் நியூஸ் கரஸ்பாண்டன்ட் ஆக பணியாற்றியுள்ளார்.
சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான மகாபாரதத்தில் பாலி கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அதுமட்டுமில்லாமல் தெலுங்கு தொலைக்காட்சியான ஜெமினி தொலைக்காட்சியிலும் ரன் எனும் சீரியலில் நடித்துள்ளார்.
2015ஆம் ஆண்டு வெளியான சென்னை உங்களை அன்புடன் வரவேற்கிறது என்ற படத்தின் மூலம் வெள்ளித்திரைக்கு அறிமுகமானார். தற்போது இவர் அவரது சமூக வலைதளப் பக்கத்தில் போட்டோ ஷூட் ஒன்று நடத்தி அதனை வெளியிட்டுள்ளார்.
அதனை பார்த்த ரசிகர்கள் க்யூட் டார்லிங், ஏஞ்சல் மற்றும் நான் செத்து விட்டேன் போன்று கமெண்ட் பாக்ஸ்ல் பதிவு செய்து வருகின்றனர்.