லாக் டவுனுக்கு பிறகு விறுவிறுப்பாக எடுக்கப்பட்டு, குறுகிய காலத்திலே தயாரான படம்தான் ‘ஈஸ்வரன்’. இந்த படத்தை சுசீந்திரன் இயக்க, சிம்பு நடித்திருக்கிறார் என்பது நம் அனைவருக்கும் தெரிந்தது தான்.
மேலும் ஏகப்பட்ட மாற்றங்களை மனதளவிலும் உடலளவிலும் செய்த சிம்பு, தீவிரமாக வேலைப்பார்த்து இந்தப் படத்தை குறித்த தேதிக்குள் முடித்துக் கொடுத்திருக்கிறார். இதனால் சிம்புவின் ரசிகர்களிடையே இந்தப் படத்திற்கான எதிர்பார்ப்பு ஏகபோகமாக உள்ளது என்றே கூறலாம்.
அதுமட்டுமில்லாமல், படத்தின் வெற்றிக்காகவும், தன்னுடைய செகண்ட் இன்னிங்க்ஸ் நல்லபடியாக அமைய வேண்டும் என்பதற்காகவும் சிம்பு, தீவிரமாக விரதமிருந்து ஐய்யப்பனை தரிசனம் செய்து வந்திருக்கிறார்.
இந்த நிலையில் நேற்று ஆல்பர்ட் திரையரங்கில் ‘ஈஸ்வரன்’ படத்தின் இசை வெளியீட்டு விழா கோலாகலமாக நடைபெற்றிருக்கிறது.
இந்த இசை வெளியீட்டு விழாவில் சிம்பு வேட்டி சட்டை அணிந்து கொண்டு, மாப்பிள்ளை கெட்டப்பில் வந்திருக்கிறார். இதனைப் பார்த்த ரசிகர்கள், விழா முழுவதும் உற்சாகத்துடன் காணப்பட்டனராம்.
மேலும் 2021 ஆம் ஆண்டு தொடங்கிய இரண்டாவது நாளே, இவ்வளவு பெரிய இசை வெளியீட்டு விழா நடைபெறுவது அனைவருக்கும் மகிழ்ச்சியாக இருப்பதாக ஈஸ்வரன் படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.
எனவே, ஈஸ்வரன் படத்தின் இசை வெளியீட்டு விழா பற்றிய செய்திகளும், விழாவின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்களும் தற்போது இணையத்தில் தீ போல் பரவி வருகிறது.