வியாழக்கிழமை, ஜனவரி 9, 2025

ஈஸ்வரன் வெற்றி என அறிக்கை விட்ட சிம்பு.. மனசாட்சியே இல்லையா உங்களுக்கு எனக் கேட்ட ரசிகர்

உடல் எடையை மொத்தமாக குறைத்துவிட்டு சிம்பு நடித்த முதல் படம் ஈஸ்வரன். மாஸ் கமர்ஷியல் என்டர்டெயின்மென்ட் படமாக உருவாகி இருந்த ஈஸ்வரன் திரைப்படம் கடந்த பொங்கலுக்கு அனைத்து திரையரங்குகளில் வெளியானது.

ஆனால் உடன் விஜய் நடிப்பில் மாஸ்டர் என்ற பிரம்மாண்ட திரைப்படம் வெளியானதால் ஈஸ்வரன் படம் பெரிய அளவு கவனத்தை பெறாமல் போனது. இருந்தாலும் முதலுக்கு மோசம் இல்லை என்கிற அளவுக்கு வசூலில் எந்த பாதிப்பும் இல்லையாம்.

நினைத்ததை விட அதிகமாகவே வசூல் செய்துள்ளதாக கோலிவுட் வட்டாரங்களில் கூறுகின்றனர். இந்நிலையில் வருகின்ற பிப்ரவரி 3ஆம் தேதி சிம்புவின் பிறந்த நாளை முன்னிட்டு சிம்பு ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளார்.

அதில் சிம்பு, எனது ரசிகர்களாகிய எனது குடும்பத்தினர் இந்த பிறந்தநாளுக்கு என்னுடைய வீட்டின் முன்பு வந்து காத்திருக்க வேண்டாம் எனவும், தான் வெளிநாடு செல்ல போவதாகவும் குறிப்பிட்டிருக்கிறார்.

மேலும் அந்த அறிக்கையில் ஈஸ்வரன் படத்தை வெற்றியடையச் செய்த என்னுடைய குடும்பத்தாருக்கு மிகவும் நன்றி எனவும் கூறியுள்ளார் சிம்பு. இதனைப் பார்த்த ரசிகர் ஒருவர், எல்லாம் சரி, ஈஸ்வரன் வெற்றின்னு சொன்ன பாரு, மனசாட்சியே இல்லையா சிம்பு சார்? என கிண்டலடித்துள்ளார்.

fan-trolled-simbu
fan-trolled-simbu

இதனால் கோபம் அடைந்த சிம்பு ரசிகர்கள், மாஸ்டர் படம் கூட தான் நன்றாக இல்லை என அவர்கள் பங்குக்கு சண்டைக்கு சென்றனர். சமூக வளைதளத்தில் இந்த மாதிரி கருத்துக்கள் வருவது சகஜம் தானே பாஸ்.

Trending News