இந்திய கிரிக்கெட் அணியில் ஒரு முக்கிய தூணாக இருப்பவர் விராட் கோலி, அதேபோல் ஹிந்தி திரையுலகில் மற்றொரு தூணாக இருப்பவர் அனுஷ்கா சர்மா. இவர்கள் இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர்.
இந்திய கிரிக்கெட் அணிக்கு விராட் கோலி எப்படி பல வெற்றிகளை வாங்கி கொடுத்தாரோ
அதேபோல் அனுஷ்கா சர்மாவும் பிகே மற்றும் சுல்தான் போன்ற படங்களின் மூலம் அவருக்கு இணையாக பல வெற்றிகளை கொடுத்து வருகிறார்.
இவர்கள் இணைந்து வெளியிடும் புகைப்படங்கள் அனைத்தும் சமூக வலைதளங்களில் பல பில்லியன் மேல் லைக்குகளையும் வாங்கி குவிக்கிறது. சமீபத்தில் இவர்களுக்கு பெண் குழந்தை பிறந்தது. இதுவரைக்கும் பெண் குழந்தை பிறந்த தகவல் மட்டுமே ரசிகர்களுக்கு தெரிவித்தனர்.
தற்போது விராட் கோலி மற்றும் அனுஷ்கா சர்மா தங்கள் குழந்தையை கையில் வைத்திருக்கும் படியும் மேலும் பெண் குழந்தைக்கு வாமிகா என பெயர் சூட்டிய படி ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளனர்.
தற்போது இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் மற்றும் பிரபலங்கள் தங்களது வாழ்த்துக்களை கூறிவருகின்றனர்.