தன்னை சினிமாவில் அறிமுகப்படுத்திய தனுஷ் உடன் நேருக்கு நேர் சிவகார்த்திகேயன் மோத முடிவெடுத்துள்ள செய்தி கோலிவுட் வட்டாரங்களில் காட்டு தீ போல் பரவ ஆரம்பித்துவிட்டது. மேலும் பல வருட பகைக்கு பழிதீர்க்க போகிறாரா எனவும் கேள்விகள் எழுந்துள்ளன.
பாண்டியராஜ் மெரினா பட வாய்ப்பை கொடுத்திருந்தாலும் தனுஷுடன் நடித்த 3 படத்தில் சிவகார்த்திகேயன் கதாபாத்திரம் அனைவரையும் ரசிக்கவைத்தது. அதனை தொடர்ந்து தனுஷ் சிவகார்த்திகேயனை ஹீரோவாக வேண்டும் என விருப்பப்பட்டு சொந்த தயாரிப்பில் எதிர்நீச்சல் படத்தை கொடுத்தார்.
வெற்றிப்படமாக அமைய உடனடியாக காக்கிச்சட்டை என்ற படத்தையும் தயாரித்தார். முதலுக்கு மோசம் இல்லை எனும் அளவுக்கு காக்கி சட்டை படம் ஓரளவு வெற்றிப் பெற்றது. காக்கி சட்டை படத்தின் போதுதான் தனுஷ் சிவகார்த்திகேயன் நிறைய பிரச்சனை எழுந்ததாக அப்போதே நிறைய பத்திரிகைகளில் செய்திகள் வெளியானது.
அதனைத் தொடர்ந்து சிவகார்த்திகேயன் மேடையில் அழுக, தனுஷ் தான் எல்லாத்துக்கும் காரணம் என முடிவே செய்து விட்டார்கள். ஆனால் அந்தப் பிரச்சினைக்கு காரணம் என்ன என்பதை தற்போது வரை மூடி மறைத்து வைத்துள்ளார் சிவகார்த்திகேயன்.
இது ஒரு புறமிருக்க தற்போது சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியிருக்கும் டாக்டர் படம் வருகின்ற ஏப்ரல் மாதம் ஒன்பதாம் தேதி தனுஷ் நடிப்பில் வெளியாகும் கர்ணன் படத்துடன் நேருக்கு நேர் மோத உள்ளதாம்.
ஏற்கனவே பலமுறை நேருக்கு நேர் மோதுவது தவறி விட்டதால் தற்போது விடாப்பிடியாக கர்ணன் படத்துடன் களமிறக்க உள்ளாராம் சிவகார்த்திகேயன். இதனால் கிசுகிசு பரப்பும் கோலிவுட் வாசிகளுக்கு செம குஷியாம். ஆனால் கடைசி நேரத்தில் ரிலீஸ் தேதி மாறும் வாய்ப்பு இருக்கிறது.