எனக்கு எந்த மதத்தின் மீதும் பெரிதாக நம்பிக்கை இல்லை என மதம் பற்றி பேசுபவர்களுக்கு பதில் அளித்துள்ளார் சிம்பு.
வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு மாநாடு படத்தில் நடித்து முடித்துள்ளார். நேற்று சிம்புவின் பிறந்தநாள் என்பதால் படத்தின் டீசரை ஐந்து மொழிகளிலும் வெளியிட்டனர்.
இப்படத்தில் மதத்தைப்பற்றி எடுக்கப்பட்டுள்ள காட்சிகள் இடம்பெற்றுள்ளதாக கேள்விகள் கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த சிம்பு எந்த மதத்தையும் சார்ந்தவன் கிடையாது எனக்கு கடவுள் ஒன்றுதான் என பதில் அளித்துள்ளார்
எனக்கு சிவன் கடவுள் ரொம்ப பிடிக்கும் என்பது அனைவருக்கும் தெரியும். ஆனால் இப்படத்தில் இஸ்லாமியராக நடித்துள்ளேன். மேலும் மதத்தை வைத்து ஒரு சிலர் சமுதாயத்தில் தவறான கண்ணோட்டத்தில் பார்க்கின்றனர். எல்லா மதத்திலும் நல்லவர்கள் உள்ளனர் எனக் கூறியுள்ளார்.
சமுதாயத்தில் மதத்தின் மீது தவறான கண்ணோட்டம் நிகழ்ந்து வருகிறது. அதனை பார்க்கும் பொழுது ஏதாவது ஒரு படத்தில் மதத்தைப் பற்றி சரியான முறையில் பேசவேண்டும் என நினைத்ததாகவும்
அதுமட்டுமில்லாமல் மாநாடு படத்தில் அதற்கான வாய்ப்பு கிடைத்ததால் படத்தில் நடிக்க ஒப்புக் கொண்டதாகவும் தெரிவித்துள்ளார். மாநாடு படத்தில் அரசியலும் வித்தியாசமான முறையில் மக்களுக்கு எடுத்துக் காட்டுவது போல் இருக்கும் என தெரிவித்துள்ளார்.