லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற கைதி படத்தில் குக் வித் கோமாளி புகழ் நடித்துள்ளது பலருக்கும் தெரியாமல் இருந்தது. இந்நிலையில் திடீரென அவரது புகைப்படம் இணையதளங்களில் வைரலாகி வருகிறது.
விஜய் டிவியில் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் குக் வித் கோமாளி நிகழ்ச்சிக்கு பல கோடி ரசிகர்கள் இருக்கின்றனர். வாரக்கடைசியில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியை ரசித்து பார்த்து வருகின்றனர்.
மேலும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் மூலம் மிகப்பெரிய வெற்றி பெற்று தற்போது சினிமாவிலும் சிலர் நடித்து வருகின்றனர். அந்தவகையில் கூக் வித் கோமாளி நிகழ்ச்சியில் ரசிகர்களின் ஆதரவை பெற்றுள்ளவர் புகழ்.
விஜய் டிவியில் காமெடி ஷோக்களில் கலந்து கொண்ட புகழ் தற்போது குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் முக்கிய கோமாளியாக வலம் வந்து கொண்டிருக்கிறார். அதுமட்டுமில்லாமல் தொடர்ந்து அவருக்கு முன்னணி நடிகர்களின் பட வாய்ப்புகள் குவிந்து வருகிறது.
அந்த வகையில் வலிமை, தளபதி 65, AV33 போன்ற படங்களில் நடிப்பதாக செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கின்றன. ஆனால் இதற்கு முன்பே லோகேஷ் இயக்கத்தில் வெளியான கைதி படத்தில் ஒரு காட்சியில் நடித்துள்ளார். அந்த புகைப்படம் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றன.
அதனைத் தொடர்ந்து மாஸ்டர் படத்திலும் லோகேஷ் புகழுக்கு வாய்ப்பு கொடுத்ததாகவும், ஆனால் முடி வெட்ட வேண்டிய ஒரே காரணத்திற்காக மாஸ்டர் படத்தை வேண்டாம் என்று கூறியதாகவும் புகழ் ஒரு பேட்டியில் தெரிவித்துள்ளார்.