இந்திய சினிமாவின் பிரம்மாண்ட இயக்குனராக வலம் வரும் ஷங்கர் சமீபத்தில் இந்தியன்2 என்ற படத்தை இயக்கிக் கொண்டிருந்தார். ஆனால் எதிர்பாராதவிதமாக அந்த படத்தை பாதியில் நிறுத்த வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது.
அதனைத் தொடர்ந்து தற்போது தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் ராம் சரணை வைத்து அதிரடி ஆக்ஷன் படம் ஒன்றை இயக்க உள்ளார். இந்த செய்திதான் சமீபத்தில் பரபரப்பாக பேசப்பட்டது.
ஆனால் தெலுங்கு தயாரிப்பாளரிடம் சங்கர் வசமாக மாட்டிக் கொண்டதாக கோலிவுட் வட்டாரங்களில் கிசுகிசுக்கின்றனர். அதற்கு காரணமும் இருக்கிறதாம். தமிழ் சினிமாவில் ஷங்கர் இயக்கும் படங்கள், சொன்ன பட்ஜெட்டை தாண்டி அதிகமாகிவிடும்.
இதனால் பல தயாரிப்பாளர்கள் பல்வேறு சிரமங்களுக்கு ஆளானார்கள். ஏன் ஷங்கர் இயக்கிய பல பிரமாண்ட படங்களை தயாரித்த பெரிய தயாரிப்பாளர்கள் தற்போது சினிமாவில் இல்லை என்பதே நிதர்சனமான உண்மை.
இதைத் தெளிவாக புரிந்துகொண்ட தெலுங்கு தயாரிப்பாளர் தில் ராஜூ, ராம்சரண் மற்றும் ஷங்கர் இணையும் படத்திற்கு தெளிவாக இவ்வளவுதான் பட்ஜெட் எனவும், இதற்கு மேல் பத்து பைசா கூட தரமுடியாது எனவும் கட் அன்ட் ரைட்டாக அக்ரிமென்டில் எழுதி வாங்கி விட்டாராம். இதனால் தற்போது சங்கர் தன்னுடைய ஆடம்பரத்தை எல்லாம் குறைத்துக்கொண்டு வேலை செய்ய வேண்டிய நிர்பந்தத்தில் உள்ளாராம்.
சங்கர் மற்றும் கமல் கூட்டணியில் உருவான இந்தியன் 2 படத்தை முதலில் தில் ராஜூ தான் தயாரிக்க இருந்தார் என்பதும் கூடுதல் தகவல். இதனைக் கேள்விப்பட்ட தமிழ் தயாரிப்பாளர்களின் ஷங்கரிடம் அனைத்தையும் சரிவர எழுதி வாங்கிக் கொண்டுதான் இனி படப்பிடிப்புக்கு செல்ல வேண்டும் என முடிவு செய்துள்ளார்களாம்.