செவ்வாய்க்கிழமை, டிசம்பர் 17, 2024

முதல்முறையாக TRP யில் சன் டிவிக்கு ஆப்பு வைத்த விஜய் டிவி.. ஒரே ஒரு நிகழ்ச்சிக்கு கொட்டும் கோடிகள்!

கடந்த சில வருடங்களாக சன் டிவி நிறுவனம் தன்னுடைய தரமான நிகழ்ச்சிகளை கொடுப்பதிலிருந்து விலகி உள்ளது. அதற்கு காரணம் யூடியூப் மற்றும் இன்ஸ்டாகிராம் போன்றவற்றில் பிரபலமானவர்களை வைத்து நிகழ்ச்சிகள் நடத்தி வருவது தான்.

டப்ஸ்மாஷ் செய்பவர்களை வைத்துக்கொண்டு நம்பர் ஒன் சேனலாக வந்து விடலாம் என கனவு காணலாமா என்கிறார்கள் மற்ற டிவி சேனல்கள். தற்போது மற்ற டிவி சேனல்களில் சீரியல்களும் ரியாலிட்டி ஷோக்களும் ரசிகர்களை கவரும் வகையில் அமைந்து வருகின்றன.

குறிப்பாக விஜய் டிவி என்றாலே ரியாலிட்டி ஷோக்களுக்கு ராஜாதான். அதனைத் தொடர்ந்து ஜீ தமிழ் டிவியில் ஒளிபரப்பாகும் ரியாலிட்டி ஷோக்களும் ரசிகர்களை கவர்ந்து வருகிறது. ஆனால் சன் டிவி ரியாலிட்டி ஷோ செய்தே நீண்ட நாட்களாகிவிட்டது.

குறிப்பாக பண்டிகை நாட்களில் இன்னும் எத்தனை நாளைக்குத்தான் பட பிரமோஷன் நிகழ்ச்சிகளையும், புதிய படங்களையும் வைத்து ஒட்டுவார்களோ தெரியவில்லை. அதன் வெளிப்பாடுதான் தற்போது சன் டிவி நிறுவனம் டிஆர்பி ரேட்டிங்கில் இரண்டாவது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது.

எப்போதுமே முதல் இடத்தில் இருக்கும் சன் டிவி தற்போது இரண்டாவது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது சன் டிவி நிறுவனத்திற்கு பெரும் அதிர்ச்சியைக் கொடுத்துள்ளார். அதற்கு காரணம் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் குக் வித் கோமாளி நிகழ்ச்சி தான்.

குக் வித் கோமாளி நிகழ்ச்சிக்கு குடும்பம் குடும்பமாக கோடிக்கணக்கான ரசிகர்கள் உள்ளனர். இதனால் குக் வித் கோமாளி நிகழ்ச்சி ஒளிபரப்பும் போது மட்டும் விஜய் டிவியின் trp வேற லெவலில் கெத்து காட்டி வருகிறது. அதேபோல் பாரதிகண்ணம்மா சீரியலும் trpயில் முதலிடத்தை பெற்றுள்ளது.

cookwithkomali-cinemapettai
cookwithkomali-cinemapettai

இதன் காரணமாக தற்போது சன் டிவி முதல் இடத்தில் இருந்து 2-வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. கண்டிப்பாக அடுத்த வாரம் ஏதாவது ஒரு புதிய படத்தை போட்டு இழந்த தங்களுடைய டிஆர்பியை மீட்க சன் டிவி நிறுவனம் போராடும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

- Advertisement -

Trending News