வாரிசு நடிகராக தமிழ் சினிமாவில் கலக்கிக் கொண்டிருக்கும் சிம்பு, தன்னுடைய பழைய சேட்டைகளையெல்லாம் மூட்டை கட்டிவிட்டு தற்போது இழந்த தன் மார்க்கெட்டை மீட்டெடுக்க தொடர்ந்து படங்களில் நடித்து வருகிறார்.
அந்தவகையில் கடைசியாக வெளியான ஈஸ்வரன் திரைப்படம் பொங்கல் விடுமுறையை காரணம் காட்டி ஓரளவு கல்லா கட்டியது. மற்ற நாட்களில் வந்திருந்தால் படத்தின் கதி அதோகதிதான். இருந்தாலும் அடுத்ததாக வெங்கட்பிரபு இயக்கத்தில் சிம்பு நடிக்கும் மாநாடு படத்தின் டீசர் வெளியானதிலிருந்து படம் எப்படி இருக்கப் போகிறதோ என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் எக்கச்சக்கமாக இருந்து வருகிறது.
அதனைத் தொடர்ந்து இயக்குனர் ராமுடன் ஒரு படத்திலும், கௌதம் மேனன் இயக்கத்தில் ஒரு படத்திலும் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார் சிம்பு. இந்த நேரத்தில்தான் சிம்புவின் புதிய முடிவைப் பார்த்து கோலிவுட் வட்டாரமே ஒரு நிமிடம் மூச்சடைத்து போய்விட்டதாம்.
ஒரு காலத்தில் பிரபு, ரஜினி ஆகியோருக்கு பல சூப்பர் ஹிட் படங்களை கொடுத்தவர் தான் பி வாசு. கடந்த மூன்று வருடங்களுக்கு முன்பு கூட ராகவா லாரன்ஸை வைத்து சிவலிங்கா என்ற படத்தை எடுத்தார். ஆனால் அந்த படம் வசூல் ரீதியாக படுதோல்வியை சந்தித்தது.
இந்நிலையில் சந்திரமுகி 2 படத்தை இயக்க இருந்த பி வாசு தற்போது அதை அப்படியே கிடப்பில் போட்டுவிட்டு நடிகர் சிம்புவுடன் இணைந்து ஒரு படத்தில் பணியாற்ற உள்ளாராம். தற்போது இது தான் கோலிவுட் வட்டாரத்தில் ஹாட் டாப்பிக்.
ஹாலிவுட் சினிமாவில் வயதான பல இயக்குனர்கள் பல சூப்பர் ஹிட் படங்களை கொடுக்கின்றனர். அதனால் திறமைக்கு வயதில்லை. கண்டிப்பாக சிம்புவை வைத்து பி வாசு கம்பேக் கொடுப்பார் என நம்பலாம்.