மலையாளத்தில் ஜீத்து ஜோசப் இயக்கத்தில் மோகன் லால், மீனா, அன்சிபா ஹாசன், எஸ்தர் அணில் நடிப்பில் வெளியாகி ஹிட் அடித்த படம் த்ரிஷ்யம். மகள் தற்காப்புக்கு முயன்று செய்த கொலையை மறைக்க, தன் குடும்பத்தை போலீசிடம் இருந்து பாதுகாக்க ஜார்ஜ் குட்டி எடுக்கும் முயற்சி தான் முழு படமும்.
இந்தப் படம் தமிழ், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி, சீன மொழியில் கூட ரிமேக் ஆனது. இப்படத்தின் இரண்டாம் பாகம் தான் சமீபத்தில் கொரானா கட்டுப்பாடு உள்ள காரணத்தால் திரையரங்க ரிலீஸ் செல்லாமல், அமேசான் ப்ரைம் தளத்தில் நேரடி ரிலீஸ் ஆகியுள்ளது.
இந்நிலையில் தமிழில் பாபநாசம் முதல் பாகத்தில் கமல் கௌதமி, நிவேதா தாமஸ், எஸ்தர் அணில் ஆகியோர் நடித்து ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. எனவே பாபநாசம் இரண்டாம் பாகத்தை பற்றி பேட்டி ஒன்றின் மூலம் இயக்குனர் ஜீத்து ஜோசப் தெரிவித்துள்ளார்.
அதில் பாபநாசம் இரண்டாம் பாகத்தில் கமல் நடிப்பாரா? என்ற கேள்விக்கு பதிலளித்த ஜீத்து ஜோசப் , ‘கமல் அனுமதி கிடைத்தால், பாபநாசம் இரண்டாம் பாகத்தை படமாக்க தயாராக உள்ளேன்.
இந்தியன் 2 ஏற்கனவே கிடப்பில் உள்ள நிலையில், அடுத்தபடியாக தேர்தலும் வந்துவிடும். லோகேஷ் கனகராஜ் இயக்கத்திலும் கமல் கமிட்டாகி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் பாபநாசம் படத்தில் கமலஹாசன் நடிப்பாரா என்ற கேள்விக்குறியில் தான் உள்ளது.
அதுமட்டுமில்லாமல் கமலைத் தவிர இந்த கதாபாத்திரத்தில் யாராலும் வெற்றி பெற முடியாது என்பதில் இயக்குனர் தெளிவாக உள்ளார். இதனால் பாபநாசம் படத்தின் இரண்டாம் பாகத்தை தேர்தல் முடிந்தபின் தொடங்குவதற்கான அதிக வாய்ப்புகள் உள்ளதாம்.
எல்லாம் கமலின் முடிவை பொறுத்தே, பாபநாசம்2 பாகத்தை பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட முடியும்’ என்று கூறியுள்ளார். இருப்பினும் பாபநாசம்2 விரைவில் வெளியாக வேண்டும் என்ற ஆர்வத்தில் ரசிகர்கள் காத்துள்ளனர்.