இந்தியாவில் பல பிரபலங்கள் முடியை இழந்ததால் பிரபலமான டாக்டர்களிடம் சிகிச்சை பெற்று செயற்கையான முறையில் தலையில் முடியை வளர்த்து வருகின்றனர். இந்த வரிசையில் நடிகர்கள் உட்பட கிரிக்கெட் வீரர்களும் இடம் பிடித்துள்ளனர்.
சல்மான் கான்: பாலிவுட் சினிமாவில் சூப்பர் ஸ்டாராக வலம் வரும் சல்மான் கான். தொடர்ந்து பல வெற்றி படங்களை கொடுத்து வசூலை வாரி குவித்து வருகிறார். இவருக்கென்று வடமாநிலத்தில் ஒரு ரசிகர் பட்டாளமே உள்ளது.
இவர் தலையில் முடியை இழந்ததால் மருத்துவரிடம் சென்று சிகிச்சை பெற்று செயற்கை முறையில் தற்போது முடியை வளர்த்து பல படங்களில் நடித்து வருகிறார்.
அரவிந்த் சாமி: தமிழ் சினிமா ஒரு காலத்தில் கொடிகட்டி பறந்தவர் அரவிந்த்சாமி. சில வருடங்களுக்கு முன்பு திரைத்துறையை விட்டு விலகியிருந்த அரவிந்த்சாமி தனி ஒருவன் என்ற படத்தின் மூலம் வில்லனாக ரிஎன்ட்ரி கொடுத்தார். இவரும் தற்போது செயற்கையான முறையில் முடியை வளர்த்து வருகிறார்.
கோவிந்தா: ஹிந்தி திரையுலகில் பல படங்களில் நடித்த கோவிந்தா தமிழில் ரம்பா நடிப்பில் வெளியான த்ரீ ரோசஸ் படத்தில் ” மெய்யானதா பொய்யானதா” எனும் பாடலுக்கு நடனமாடி இருப்பார். இவரும் முடியை இழந்ததால் செயற்கை முறையில் முடியை வளர்த்து வருகிறார்.
சவுரவ் கங்குலி: கிரிக்கெட் உலகின் தாதா என செல்லமாக அழைக்கப்படும் சவுரவ் கங்குலி பல கிரிக்கெட் போட்டிகளில் சிறப்பாக விளையாடி பல வெற்றிகளை கொடுத்துள்ளார். சில வருடங்கள் முன்பு ஓய்வு அறிவித்த சவுரவ் கங்குலி தற்போது கிரிக்கெட் துறையில் அறிவுரை கூறும் நிறுவராக உள்ளார். இவரும் தற்போது செயற்கை முறையில் முடியை வளர்த்து வருகிறார்.
ஹர்ஷா போகள்: ஹர்ஷா போகள் முதன்முதலாக ஆல் இந்தியா ரேடியோ ஸ்டேஷனில் கமாண்டராக பணியாற்றியுள்ளார். அதன் பிறகு ஆஸ்திரேலியா பிரோடுகேஸ்டிங் கார்ப்பரேஷன் மற்றும் கிரிக்கெட் வேர்ல்டு கப் ஆகிய தொடர்களில் சிறந்த கமாண்டராக பணியாற்றியுள்ளார். இவரும் தற்போது செயற்கை முறையில் முடியை வளர்த்து வருகிறார்.
விரேந்திர ஷேவாக்: இந்திய கிரிக்கெட் அணி வெற்றிக்கு பாடுபட்டவர்களுல் வீரேந்திர ஷேவாக்கும் ஒருவர். இவர் அன்றைய காலகட்டத்தில் பல போட்டிகளில் சிறப்பாக விளையாடி பல வெற்றிகளை வாங்கி கொடுத்துள்ளார். பின்பு தனது திறமையில் கொஞ்சம் சரிவு ஏற்பட கிரிக்கெட்டிலிருந்து விலகுவதாக அறிவித்தார். இவரும் தற்போது செயற்கை முறையில் முடியை வளர்த்து வருகிறார்.