மாஸ்டர் படத்தின் வெற்றிக்குப் பிறகு தளபதி ரசிகர்கள் வெறித்தனமாக காத்துக்கொண்டிருக்கும் திரைப்படம் என்றால் அது தளபதி 65 படம்தான். மாஸ்டர் படத்தை போலவே தளபதி 65 படமும் ஒரு புதிய கூட்டணியில் உருவாக உள்ளது.
வெறும் இரண்டு படங்கள் மட்டும் பண்ணிய லோகேஷ் கனகராஜூக்கு எப்படி மாஸ்டர் பட வாய்ப்பை விஜய் கொடுத்தாரோ அதே போல் கோலமாவு கோகிலா மற்றும் டாக்டர் என்ற இரண்டு படங்களை மட்டுமே இயக்கியுள்ள நெல்சன் திலிப்குமாருக்கு தளபதி 65 படத்தில் வாய்ப்பு கொடுத்துள்ளார் விஜய்.
சன் பிக்சர்ஸ் பிரமாண்டமாக தயாரிக்கும் தளபதி 65 படத்தில் விஜய்க்கு மூன்றாவது முறையாக அனிருத் இசையமைக்க உள்ளார். மேலும் மற்ற நடிகர் நடிகைகள் தேர்வு நடைபெற்று வருகிறதாம். ஆனால் எந்த ஒரு தகவலும் வெளியே சென்றுவிடக் கூடாது என்பதில் சன் பிக்சர்ஸ் நிறுவனம் கண்ணும் கருத்துமாக செயல்பட்டு வருகிறார்கள்.
இருந்தாலும் தளபதி 65 படத்தைப் பற்றிய செய்திகள் ஏதோ ஒரு வகையில் லீக்காகிக் கொண்டிருக்கின்றன. அந்த வகையில் தற்போது விஜய் தளபதி 65 படத்தில் பணியாற்ற போகும் ஸ்டன்ட் மாஸ்டர் பற்றி அப்டேட் ஒன்று கிடைத்துள்ளது.
கேஜிஎப் படங்களுக்கு பணியாற்றிய அன்பறிவு என்ற இரட்டையர்கள் தான் தளபதி 65 படத்தின் ஸ்டண்ட் மாஸ்டராக பணியாற்றிய உள்ளார்களாம். இந்த தகவலை அன்பறிவு ஸ்டண்ட் குழுவில் பணியாற்றும் நபர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கலாம் என காத்திருந்த செய்தியை பொசுக்கென்று இந்த நபர் கூறியதால் சன் பிக்சர்ஸ் நிறுவனம் தற்போது அப்செட்டில் உள்ளதாம். மேலும் அந்த நபர், தளபதி 65 படம் வெளியான பிறகு கேஜிஎஃப் படத்தின் சண்டைக் காட்சிகள் எல்லாம் தடம் தெரியாமல் போய்விடுமளவுக்கு மாஸாக இருக்கும் என குறிப்பிட்டு ரசிகர்களை வெறியேற்றியுள்ளார்.