கடந்த சில மாதங்களாகவே வாரத்திற்கு ஒரு படத்தில் சிம்பு நடிப்பதாக செய்திகள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன. அந்த அளவுக்கு உடல் எடையை குறைத்த பிறகு அவருக்கு பட வாய்ப்புகள் குவிந்து கொண்டிருப்பதை பார்த்து முன்னணி நடிகர்களே ஆச்சரியப்படுகிறார்களாம்.
ஒரு காலத்தில் தயாரிப்பாளர்களுக்கு தண்ணி காட்டிய சிம்பு தற்போது அதே தயாரிப்பாளர்களுக்கு நல்ல பிள்ளையாக நடந்து கொள்கிறார். இதனால் தொடர்ந்து அவருக்கு பட வாய்ப்புகள் வந்து கொண்டிருக்கின்றன. மேலும் முன்னாடி போல் ஏனோதானோ என படம் நடிக்க கூடாது என்பதில் உறுதியாக இருக்கிறாராம்.
அதனால் தன்னுடைய ஒவ்வொரு பட இயக்குனரையும் பார்த்து பார்த்து தேர்வு செய்து வருகிறார் சிம்பு. ஈஸ்வரன் படத்தின் சுமாரான வெற்றிக்குப் பிறகு வெங்கட் பிரபு இயக்கத்தில் மாநாடு, ராம் இயக்கத்தில் ஒரு படம் என ஒவ்வொரு படமும் ரசிகர்களின் எதிர்பார்ப்பை அதிகரிக்க வைத்துள்ளது.
அந்த வகையில் தற்போது சிம்பு விக்ரமின் சூப்பர் ஹிட் பட இயக்குனருடன் கூட்டு சேர்ந்துள்ளார். விக்ரம் இரட்டை வேடங்களில் நடித்து 2016ஆம் ஆண்டு வெளியாகி சூப்பர் ஹிட் அடித்த திரைப்படம் தான் இருமுகன். இந்த படத்தை இயக்கியவர் ஆனந்த் சங்கர்.
ஆனந்த் சங்கர் இயக்கத்தில் இதுவரை அரிமா நம்பி, நோட்டா போன்ற படங்கள் ரிலீஸ் ஆகியுள்ளன. அடுத்ததாக விஷால் மற்றும் ஆர்யா இணைந்து நடிக்கும் எனிமி படம் விரைவில் வெளியாக உள்ளது. எனிமி படத்திற்கு பிறகு ஆனந்த் ஷங்கர் நடிகர் சிம்புவுடன் இணைந்து ஒரு படத்தில் பணியாற்ற உள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளன.
இதனால் சிம்பு காட்டில் இனி அடைமழை தான். சிம்பு இனி தமிழ் சினிமாவில் தொடர் வெற்றிகளை குவித்து சில வருடங்களிலேயே முன்னணி இடத்தைப் பிடித்துவிடுவார் என கோலிவுட் கருத்துக் கணிப்பு தெரிவிக்கிறதாம்.