ஹிந்தியில் சூப்பர் ஹிட்டாகும் ரியாலிட்டி ஷோக்களை தமிழிலும் தொடர்ந்து நடத்தி வருகின்றனர். அந்த வகையில் ரசிகர்கள் மத்தியில் ஏக போக வரவேற்பைப் பெற்ற நிகழ்ச்சிதான் பிக் பாஸ்.
விஜய் டிவியில் 4 சீசன்களை கடந்துள்ள பிக் பாஸ் நிகழ்ச்சியில் தற்போது 5வது சீசனுக்கான ஆரம்ப கட்டத்தில் உள்ளது. விரைவில் பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சிக்கான ஆட்களைத் தேர்வு செய்யும் வேலையில் இறங்கிவுள்ளார்களாம்.
முதல் மூன்று பிக் பாஸ் சீசன் நிகழ்ச்சிகள் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது. ஆனால் கடந்த சீசனில் இதுவரை இல்லாத அளவுக்கு ரசிகர்களின் பொறுமையை சோதித்து இதுவரை வந்ததிலேயே மொக்கையான பிக் பாஸ் சீசன் என பெயர் எடுத்தது.
இதனால் பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில் சரியான ஆட்களை தேர்வு செய்ய வேண்டும் என்பதில் விஜய் டிவி நிறுவனம் கண்ணும் கருத்துமாக செயல்பட்டு வருகிறதாம். இதனால் ஆட்தேர்வுக்கு மட்டும் நீண்ட நாட்கள் எடுத்துக் கொள்ளப் போகிறார்களாம்.
வழக்கம்போல் பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியும் ஜூன் மாத இடையில் ஆரம்பமாக உள்ளதாம். பெரும்பாலும் ஜூன் 19-ஆம் தேதி பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சி ஆரம்பமாக அதிக வாய்ப்பு இருக்கிறது என்கிறார்கள் பிக்பாஸ் வட்டாரங்கள்.
மேலும் விஜய் டிவி நிறுவனம் எண்டமால் நிறுவனத்துடன் அடுத்த பத்து சீசன்களுக்கான ஒப்பந்தத்தை செய்துள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த முறையும் பிக்பாஸ் நிகழ்ச்சி கமலஹாசன் தொகுத்து வழங்க அதிக வாய்ப்பு இருக்கிறது. இருந்தாலும் எச்சரிக்கையாக இன்னொரு தொகுப்பாளர் ரெடி செய்ய உள்ளார்களாம் விஜய் டிவியினர்.