நீண்ட இடைவெளிக்குப் பிறகு சிலம்பரசன் மீண்டும் தமிழ் சினிமாவில் சரித்திரம் படைக்க களமிறங்கி விட்டார். அடுத்தடுத்து படங்களில் நடித்து இழந்த மார்க்கெட்டை மீண்டும் பிடிக்க முடிவு செய்துவிட்டாராம்.
அந்தவகையில் ஒரே மாதத்தில் சிம்பு நடித்து முடித்த திரைப்படம் தான் ஈஸ்வரன். வருகின்ற பொங்கலுக்கு மாஸ்டர் படத்துடன் போட்டி போட்டு வெளியானது. அதனைத் தொடர்ந்து வெங்கட்பிரபு இயக்கத்தில் மாநாடு படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார்.
இந்த படமும் தற்போது இறுதிகட்ட படப்பிடிப்புகளில் இருந்து வருகிறது. இதனைத் தொடர்ந்து ஞானவேல் ராஜா தயாரிப்பில் சில்லுனு ஒரு காதல் பட இயக்குனர் கிருஷ்ணா இயக்கத்தில் பத்து தல என்ற படத்தில் நடிக்க உள்ளார்.
கன்னடத்தில் வெளியாகி மிகப்பெரிய வெற்றியைப் பெற்ற மப்டி படத்தின் தமிழ் ரீமேக் என்பது குறிப்பிடத்தக்கது. இதனைத் தொடர்ந்து மிஸ்கின் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்கவுள்ளார் சிம்பு.
மேலும் 2021 தீபாவளிக்கு மீண்டும் சுசீந்திரன் கூட்டணியில் ஒரு படம் வெளியாகும் என்பதை ஈஸ்வரன் இசை வெளியீட்டு விழாவில் சிம்பு அதிகாரப்பூர்வமாக அறிவித்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் மன்மதன் ஸ்டைலில் கூலிங் கிளாஸ் போட்டு செம கெத்தாக நிற்கும் புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. மீண்டும் ஆணழகன் தோற்றத்திற்கு மாறிய சிம்புவின் இந்த புகைப்படத்தில் இலட்சக்கணக்கில் லைக்குகள் குவிந்துள்ளது.