செவ்வாய்க்கிழமை, ஜனவரி 14, 2025

விஜய்யுடன் இணையும் சிவகார்த்திகேயன்.. தளபதி 65 வெறித்தனமான அப்டேட்!

தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக ஜொலித்து கொண்டிருப்பவர் தான் தளபதி விஜய். இவரது நடிப்பில் வெளிவரும் ஒவ்வொரு  படத்தையும் தளபதி ரசிகர்கள் வெறித்தனமாக கொண்டாடி வருகின்றனர்.

அந்த வகையில் சமீபத்தில் வெளியான ‘மாஸ்டர்’ திரைப்படம் வசூல் ரீதியாக சாதனை புரிந்ததோடு, விஜய்க்கு பாக்ஸ் ஆபீஸ் சக்கரவர்த்தி என்ற பெயரையும் பெற்றுத்தந்தது.

இந்தப்படத்தில் தளபதி விஜய், மக்கள் செல்வன் விஜய் சேதுபதியுடன் இணைந்து நடித்து ரசிகர்களுக்கு திரை விருந்தை படைத்தார்.  அதேபோல் தளபதி விஜய் அடுத்ததாக நடிக்க உள்ள அவரது 65வது படத்தில் சிவகார்த்திகேயனுடன் இணைய உள்ளதாக தற்போது தகவல்கள் வெளியாகி உள்ளது.

ஏனென்றால் ஏற்கனவே நெல்சன் இயக்கிய படங்களில் சிவகார்த்திகேயன் பாடல் எழுதி சூப்பர் ஹிட் அடித்தது. அதாவது கோலமாவு கோகிலா படத்தில் ‘கல்யாண வயசு’ பாடல், டாக்டர் படத்தில் ‘செல்லம்மா’, ‘சோ பேபி’ ஆகிய பாடல்கள் அனைத்தும் சிவகார்த்திகேயன் எழுதியதே.

அதேபோல் நெல்சன் அடுத்ததாக இயக்கும் தளபதி 65 படத்திலும் சிவகார்த்திகேயன் பாடல் எழுத உள்ளாராம். எனவே விரைவில் இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

thalpathy65-cinemapettai

ஆகையால் தளபதி 65 படத்தில், தளபதி விஜய் மற்றும் சிவகார்த்திகேயன் இணையப் போவதை அறிந்த அவர்களது ரசிகர்கள் குத்தாட்டம் போட்டு கொண்டாடி வருகின்றனர்.

Trending News