புதன்கிழமை, ஜனவரி 15, 2025

குக் வித் கோமாளிக்கு போட்டியாக சன் டிவி களமிறக்கும் புதிய நிகழ்ச்சி.. தலைமை தாங்கும் முன்னணி நடிகர்!

கடந்த சில வருடங்களாக சன் டிவி ரியாலிட்டி ஷோக்களில் சொதப்பி வருகிறது. ஒரு காலத்தில் ரியாலிட்டி ஷோ எப்படி நடத்த வேண்டும் என எடுத்துக்காட்டாக இருந்த சேனலுக்கு இப்படி ஒரு நிலைமையா என அனைவரும் கவலைப்படும் நிலைமைதான்.

ஒரு காலத்தில் தங்க வேட்டை, டீலா நோ டீலா போன்ற தரமான நிகழ்ச்சிகளை வழங்கிய சன் டிவி நிறுவனம் சமீபகாலமாக சீரியல்களில் மட்டுமே கவனம் செலுத்தி ரியாலிட்டி ஷோக்களில் கோட்டை விட்டு விட்டது. புதிய படங்கள் மட்டும் இல்லை என்றால் சன் டிவியின் கதி அதோகதிதான்.

ஆனால் அதற்கு நேர்மாறாக விஜய் டிவி மற்றும் ஜீ தமிழ் போன்ற சேனல்கள் சீரியல்களிலும் ரியாலிட்டி ஷோக்களிலும் வெற்றிக்கொடி நாட்டி வருகின்றனர். அந்த வகையில் தற்போது விஜய் டிவியில் குக் வித் கோமாளி நிகழ்ச்சி டிஆர்பி-யில் மற்ற சேனல்களை அதலபாதாளத்தில் தள்ளி விட்டது.

இப்படியே விட்டால் வேலைக்கு ஆகாது என சன் டிவி நிறுவனம் மீண்டும் ஒரு ரியாலிட்டி ஷோவை கையிலெடுக்க உள்ளதாம். ஏற்கனவே சன் டிவியில் விஜய் சேதுபதி தொகுத்து வழங்கிய நம்ம ஊரு ஹீரோ என்ற நிகழ்ச்சியை மீண்டும் கொண்டுவர உள்ளதாம்.

அதில் யூடியூபில் சமையல் வீடியோக்களை போடும் பிரபலங்களை நேரில் அழைத்து பேட்டி எடுப்பது போன்ற நோக்கத்தில் உருவாக உள்ளதாம். ஒரு சமையல் போட்டிக்கு எதிராக இன்னொரு சமையல் கலையை வைத்து தான் சாதிக்க வேண்டுமென இந்த முடிவெடுத்துள்ளார்களாம்.

namma-ooru-hero-vijaysethupathy
namma-ooru-hero-vijaysethupathy

இதே நம்ம ஊரு ஹீரோ நிகழ்ச்சியில் தான் கடவுளைப் பற்றி தவறாக பேசியதாக விஜய்சேதுபதி சர்ச்சையில் சிக்கினார். மீண்டும் அதே நிகழ்ச்சிக்கு அவரை கூப்பிட்டால் வருவாரா என்பது சந்தேகம்தான். இப்படி பல்வேறு இடியாப்ப சிக்கலில் மாட்டியுள்ள சன் டிவி எப்படி மீண்டு வர போகிறதோ? பொறுத்திருந்து பார்ப்போம்.

Trending News