வியாழக்கிழமை, ஜனவரி 16, 2025

‘இருக்கு இங்க பிரச்சனை இருக்கு’ பிரபலம் அவினாஷ் மனைவி எந்த நடிகை தெரியுமா? கண்டிப்பா ஷாக் ஆயிடுவீங்க

தமிழ் சினிமாவில் பல நடிகர்களும் நடிகைகளும் ஆரம்பகாலத்தில் படங்களில் நடித்து பின்பு காதல் வசப்பட்டு திருமணம் செய்து கொள்வார்கள். அந்த வரிசையில் இந்த பிரபலங்களுக்கும் ஒரு முக்கிய இடம் உண்டு.

1986 ஆம் ஆண்டு தனது திரை வாழ்க்கையைத் தொடங்கியவர் அவினாஷ். அதன்பிறகு இவர் தற்போது வரை பல படங்களில் குணச்சித்திர வேடத்தில் நடித்து வருகிறார்.

ஆனால் 2001 ஆம் ஆண்டு அவினாஷ் மற்றும் மாளவிகாவிற்கு காதல் ஏற்பட்டு பின்பு திருமணம் செய்து கொண்டுள்ளனர். இவர்கள் இருவரும் நடிகர்கள் என்பது பல ரசிகர்களுக்கு தெரியும். ஆனால் கணவன் மனைவி என்பது ஒரு சில ரசிகர்களுக்கு மட்டுமே தெரியும்.

avinash-malavika-cinemapettai
avinash-malavika-cinemapettai

ஜேஜே படத்தில் மாளவிகா அண்ணியாக நடித்திருப்பார். அன்றைய காலத்தில் அண்ணி கதாபாத்திரம் என்றாலே அனைவருக்கும் ஞாபகம் வருவது மாளவிகா மட்டும்தான் ஏனென்றால் தனது சிறப்பான நடிப்பின் மூலம் அண்ணியின் கதாபாத்திரத்தில் தூள் கிளப்புவார்.

அதேபோல் ஒருகாலத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களின் பாராட்டை பெற்றவர் அவினாஷ். விஜய் நடிப்பில் வெளியான திருமலை படத்தில் அசோக் கதாபாத்திரத்தில் நடித்திருப்பார். மேலும் சந்திரமுகி படத்தில் ராமச்சந்திரா ஆச்சாரியாகவும் நடித்து ரசிகர்களிடம் மிகப்பெரிய பாராட்டை பெற்றார்.

மாளவிகாவும் கேஜிஎஃப் படத்தில் தீபா எனும் கதாபாத்திரத்தில் நடித்து உலக அளவில் ரசிகர்களிடம் பிரபலமானார். தற்போது வரை இவர்கள் இருவருமே குணச்சித்திர வேடத்தில் நடித்து வருகின்றனர்.

Trending News