புதன்கிழமை, ஜனவரி 22, 2025

2021ல் வெளிவர உள்ள 6 சூப்பர் ஹிட் படங்களின் ரீமேக்.. பட்டையை கிளப்பும் கோலிவுட்

பொதுவாக தரமான கதையும், மக்களிடையே அதிக வரவேற்பை பெற்ற படங்களும் ரீமேக் செய்வது வழக்கம் தான். அந்த வகையில் தற்போது சூப்பர் ஹிட்டடித்த படங்கள் ரீமேக் செய்ய வேண்டும் என்ற ரசிகர்களின் ஆசையை ஏற்றும் வகையில் ஒருசில படங்கள் ரீமேக்காக உள்ளது. அப்படிப்பட்ட படங்களின் லிஸ்ட் இதோ!

முந்தானை முடிச்சு: 1983 ஆம் ஆண்டு தமிழ் சினிமாவில் இளையராஜா இசையில், ஏவிஎம் சரவணன் தயாரிப்பில் பாக்யராஜ் இயக்கி நடித்து, கிளாசிக்கல் ஹிட்டடித்த முந்தானைமுடிச்சு படத்தை தற்போது மீண்டும் பாக்கியராஜ் இயக்கத்தில் சசிகுமார் நடிப்பில் ரீமேக் செய்யப்பட உள்ளது.

எனவே 36 வருடங்களுக்குப் பிறகு, இந்த படத்தின் உரிமையை ஏவிஎம் சரவணன் இடமிருந்து ஜே.எஸ்.பி ஸ்டுடியோஸ் நிறுவனம் கைப்பற்றியுள்ளது. இதில் ஊர்வசி கதாபாத்திரத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்க உள்ளது குறிப்பிடத்தக்கது. ஆகையால் அந்தக்காலம் முதல் இந்தக்காலம் வரை மவுசு குறையாமல் இருக்கும் முந்தானை முடிச்சு படத்தின் ரீமேக்காக ரசிகர்கள் ஆர்வத்துடன் காத்துள்ளனர்.

Mundhanai-Mudichu-Cinemapettai

ஏஜெண்ட் சாய் ஸ்ரீனிவாஸ ஆத்ரேயா: தெலுங்கில் 2019-ம் ஆண்டு ஸ்வரூப் ஆர்.எஸ்.ஜே இயக்கத்தில் நவீன், ஸ்ருதி ஷர்மா, ஸ்ரீதா ராஜகோபாலன், ராம்தத், விஸ்வநாத் உள்ளிட்ட பல புதுமுகங்கள் நடிப்பில் வெளியான சூப்பர் ஹிட்டடித்த தெலுங்குப் படம் தான் ‘ஏஜெண்ட் சாய் ஸ்ரீனிவாஸ ஆத்ரேயா’.

இந்த படம் ரசிகர்களின் மத்தியிலும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றதால் தமிழில் ரீமேக் செய்யப்பட உள்ளது. வஞ்சகர் உலகம்’ படத்தின் இயக்குநரான மனோஜ் பீடா இயக்கவுள்ள இந்தப் படத்தின் கதாநாயகனாக சந்தானமும், நாயகியாக ரியா சுமன் நடிக்கவுள்ளார்.

Agent-Sai-Srinivasa-Athreya-Cinemapettai

முஃப்தி – பத்து தல: 2017-ம் ஆண்டு கன்னடத்தில் நரதன் இயக்கத்தில் சிவராஜ்குமார், ஸ்ரீமுரளி உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் ‘முஃப்தி’. தமிழில் ரீமேக்காகும் உள்ள இந்த படத்தை ஞானவேல் ராஜா தயாரித்து ஜில்லுனு ஒரு காதல் படத்தின் இயக்குனர் கிருஷ்ணா இந்தப் படத்தை இயக்க உள்ளார். இந்தப் படத்திற்கு ‘பத்து தலை’ என பெயரிடப்பட்டு, சிம்பு கௌதம் கார்த்திக் இணைந்து நடிக்கவுள்ளனர்.

Pathu-Thala-Cinemapettai

நின்னு கோரி – தள்ளிப்போகாதே:  2017-ம் ஆண்டு நானி நடிப்பில் வெளியான ‘நின்னு கோரி’ என்ற தெலுங்கு படத்தின் தமிழ் ரீமேக் ரீமேக் தான் ‘தள்ளிப்போகாதே’ என்ற படம். இந்த படமானது இயக்குனர் ஆர் கண்ணன் இயக்கத்தில், அதர்வா மற்றும் அனுபமா பரமேஸ்வரன் நடிப்பில் உருவாகிக் கொண்டிருக்கிறது.

Thalli-Pogathey-Cinemapettai

அந்தாதுன் – அந்தகன்: ஹிந்தியில் கடந்த 2018 ஆம் ஆண்டு வெளியாகி மிகப்பெரிய ஹிட் அடித்த படம் ‘அந்தாதுன்’. ஸ்ரீராம் ராகவன் இயக்கத்தில் ஆயுஷ்மான் குரானா, தபு, ராதிகா ஆப்தே உள்ளிட்டோர் நடித்த இப்படம் நல்ல வரவேற்பை பெற்றது. தமிழில், இதன் ரீமேக் உரிமையை நடிகரும், தயாரிப்பாளருமான தியாகராஜன் வாங்கியுள்ளார்.

இதில், தனது மகன் பிரசாந்தை நடிக்க வைக்க திட்டமிட்டுள்ளார். அந்தாதுன் படத்தில் கதாநாயகன் கண்பார்வையற்றவராக நடித்திருப்பார். அதேபோல் கதாபத்திரத்தில் பிரசாந்த் அந்தகன் படத்தில் நடிக்கவிருக்கிறார்.

மேலும் ஹிந்தியில் நடிகை தபு கதாபாத்திரத்தில் தமிழில் சிம்ரன் நடிக்கவிருக்கிறார். ‘பொன்மகள் வந்தால்’ படத்தை இயக்கிய ஜே.ஜே. பிரடெரிக் இப்படத்தை இயக்கவிருக்கிறார். தமிழில் ‘அந்தகன்’ என பெயரிடப்பட்டுள்ளது. எனவே இந்தப் படத்தின் மூலம் பிரசாந்த் செகண்ட் இன்னிங்சை தொடங்குவார் என்று அவருடைய ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.

Andhagan-Cinemapettai

ஆண்ட்ராய்டு குஞ்சப்பன் – கூகிள் குட்டப்பன்: கடந்த 2019ஆம் ஆண்டு மலையாளத்தில் சுபின் ஷாகிர் மற்றும் சுராஜ் வெஞ்சரமூடு ஆகியோர் நடிப்பில் வெளியான சூப்பர் ஹிட் படமான ‘ஆண்ட்ராய்டு குட்டன்’ என்ற படத்தை, 20 வருடம் கழித்து கே.எஸ். ரவிக்குமார் தயாரிக்கவுள்ளார். இந்த படத்தில் முதன் முதலாக தர்ஷன் மற்றும் லாஸ்லியா இணைந்து நடிக்க விருக்கின்றனர். இந்தப் படத்தை சபரி சரவணன் இயக்குகிறார். பிரபல இசையமைப்பாளர் ஜிப்ரான் இசையமைக்கிறார்.

மலையாளத்தில் காமெடி கலந்த அறிவியல் புனைகதை பாணியில் உருவாக்கப்பட்ட ஆண்ட்ராய்டு குட்டனை, தமிழில் கே.எஸ். ரவிக்குமார் ஒரிஜினல் வெர்ஷனை மிஞ்சும் அளவுக்கு உருவாக்குவார் என்ற எதிர்பார்ப்பில் ரசிகர்கள் உள்ளனர்.

Google-Kuttappan-Cinemapettai

Trending News