வெள்ளிக்கிழமை, ஜனவரி 17, 2025

கத்தி பட சம்பள பாக்கியை கேட்டேன், மாஸ்டர் படத்துல தூக்கிட்டாங்க.. புலம்பும் பிரபலத்தின் மகன்!

விஜய்யின் கத்தி படத்தில் நடித்தபோது பாதி சம்பளத்தை கொடுத்து விட்டு மீதி சம்பளம் தராததால் அதை கேட்ட தன்னை மாஸ்டர் படத்தில் நடிக்க விடாமல் ஒரு குரூப் வேலை செய்ததாக பிரபலம் ஒருவர் சமீபத்திய பேட்டி ஒன்றில் குறிப்பிட்டுள்ளார்.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் தளபதி விஜய் நடிப்பில் ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் 2014 ஆம் ஆண்டு வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்ற திரைப்படம் கத்தி. விஜய்யின் இரண்டாவது 100 கோடி வசூல் செய்த திரைப்படமாக அமைந்தது.

இந்த படத்தில் விவசாயிகள் தொடுத்த வழக்கை விசாரிக்கும் நீதிபதி கதாபாத்திரத்தில் நடித்தவர் தான் முன்னால் பிரபலம் கண்ணதாசனின் மகன் கோபி கண்ணதாசன். இவர் விக்ரம்பிரபு நடித்த இவன் வேற மாதிரி படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார்.

அதனைத் தொடர்ந்து தற்போது வரை பல படங்களில் சின்ன சின்ன கதாபாத்திரங்களில் நடித்து வரும் கோபி கண்ணதாசனுக்கு கத்தி படத்தில் ஒரு குறிப்பிட்ட சம்பளம் பேசப்பட்டதாம். ஆனால் அது பாதியை கொடுத்துவிட்டு மீதியை தற்போது வரை தரவில்லையாம். அதுகுறித்து லைக்கா நிறுவனத் திடம் கேட்டபோது, தொகையை முழுவதும் கொடுத்துவிட்டதாகவும், உங்களுக்கு சம்பளம் தருபவர்களை சந்தித்து விசாரித்துக் கொள்ளுங்கள் எனக் கூறி அனுப்பி விட்டார்களாம்.

gobi-kannathasan
gobi-kannathasan

அதைப்போல் விஜய்யின் மாஸ்டர் படத்தில் நடிக்கவும் மிகப்பெரிய வாய்ப்பு கிடைத்ததாம். ஆனால் அதே நேரத்தில் லைகா தயாரிப்பில் திரிஷா நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்புகள் வெளிநாடுகளில் நடக்கப்போவதாக கூறியுள்ளனர். அதன் காரணமாக மாஸ்டர் படத்தில் நடிக்க முடியாமல் போய்விட்டதாம்.

பின்னர் மீண்டும் அந்த திரிஷா படத்தின் நாட்களை தள்ளி வைத்து விட்டனர். என்னவென்று புரியாமல் விழித்த போது தான், பாக்கி சம்பளத்தை கேட்டதால் வேண்டுமென்றே மற்ற படங்களில் கமிட் ஆகும்போது தங்களுடைய பட வேலை இருக்கிறது எனக் கூறி மற்ற படத்தில் வரும் வாய்ப்புகளைக் கெடுத்துக் கொண்டிருக்கின்றனர் எனக் புரிந்து கொண்டாராம் கோபி கண்ணதாசன்.

Trending News