கிரிக்கெட் போட்டிகளில் ஒரு பேட்ஸ்மேன் அவுட் செய்யக்கூடியது என்பதே எதிரணி பந்துவீச்சாளர்களின் முக்கியமான பங்கு. பொதுவாக ஐந்து முறைப்படி விக்கெட்டை எடுக்கலாம். இது பொதுவாக எல்லா போட்டிகளிலும் நடக்கக் கூடிய ஒரு நிகழ்வு.இது போக இன்னும் சில முறைகள் இருக்கின்றன அவற்றைக் காண்போம்.
ஸ்டம்பில் பட்டு அவுட் ஆவது, கேட்ச் மூலமாக அவுட் ஆவது, எல்பிடபிள்யூ மூலமாக அவுட் ஆவது, ரன் அவுட் ஆவது மற்றும் ஸ்டம்பிங் ஆவது போன்ற 5 சாதாரண அவுட்டாகும் முறையை அனைத்து போட்டியிலும் பார்த்திருக்கலாம். ஆனால் மற்றுமொரு 5 முறையில் ஒரு பேட்ஸ்மேனை அவுட் செய்ய முடியும்.
ஹிட் விக்கெட்: இது ஒரு பேட்ஸ்மேன் தானாகவே ஸ்டம்பில் மோதும் போதும் அல்லது மட்டை படும்போதும் கொடுக்கக்கூடிய ஒரு விக்கெட் முறையாகும்.
ஹிட் தி பால் twice: இது ஒரு பேட்ஸ்மேன் வந்த இருமுறை அடிக்கும் போது கொடுக்கப்படும் ஒரு விக்கெட். இப்படி பந்து இருமுறை படும்பொழுது, பேட்ஸ்மேன்களுக்கு தெரியாமல் பட்டாலோ அல்லது பேட்ஸ்மேன் ஸ்டம்பில் பந்து படாமல் இருப்பதற்கு தடுத்தாலும் விதிவிலக்கு உண்டு.
Timmed அவுட்: இது ஒரு பேட்ஸ்மேன் அவுட்டாகி வெளியில் செல்லும்போது அடுத்து வரும் பேட்ஸ்மேன் உள்ளே வருவதற்கு 3 நிமிடத்திற்கு மேல் ஆனால் அதன் பெயர் Timmed டவுட்.
ரிட்டயர்டு அவுட்: அம்பயரின் அனுமதி இல்லாமல் ஒரு பேட்ஸ்மென் வெளியில் சென்றால், அது ரிட்டயர்டு அவுட்.
Abstructing the Field: இது பில்டிங் செய்யும் எதிரணியினரை பீல்டிங் செய்ய விடாமலும், அவர்கள் அவுட் செய்யும்போது மட்டை உடம்பு போன்றவற்றை பயன்படுத்தி தடுப்பது இந்த முறையில் அவுட் கொடுக்கப்படும்.
இதுபோக mankading, handling the ball இது இரண்டும் ரன் அவுட் மற்றும் Abstructing the field விதியின் கீழ் அவுட் கொடுக்கப்படும்.