தன் வாழ்க்கையில் சினிமாவின் மூலம் சம்பாதித்த அனைத்து பணத்தையும் சினிமாவில்தான் செலவு செய்வேன் எனக் கூறி தமிழ் சினிமாவில் பல சாதனைகளை படைத்துள்ளார் கமல்ஹாசன். குறிப்பாக சொல்ல வேண்டுமென்றால் சினிமாவில் சிவாஜிக்கு பிறகு கமல்ஹாசன் செய்யாத சாதனைகளை கிடையாது என்று கூட கூறலாம்.
ஜேம்ஸ்பாண்ட் படத்தில் உள்ள கதையை போலயே தத்துரூபமாக 1986ஆம் ஆண்டு விக்ரம் எனும் படத்தை கமல்ஹாசன் நடித்து தயாரித்திருந்தார். ஜேம்ஸ்பாண்ட் படங்களைப் போன்று ஒன்றுக்கும் மேற்பட்ட கதாநாயகிகள் இப்படத்தில் நடித்துள்ளனர்.
அன்றைய காலத்தில் சண்டை என்றாலே எல்லாரும் கத்தி, கம்பு வைத்து சண்டை போடுவார்கள். ஆனால் கமல்ஹாசன் அப்போதே பல பொருட் செலவுகளை செய்து ஆக்சன் மற்றும் கன்வயரிங் போன்ற காட்சிகளை எடுத்தார்.
அதுமட்டுமில்லாமல் முதல் முதலில் கம்ப்யூட்டரை பயன்படுத்தி பாட்டுகளை ரெக்கார்டு செய்தது இந்த படத்தில்தான். ஜேம்ஸ்பாண்ட் படத்திற்கு எவ்வளவு டெக்னாலஜியை பயன்படுத்தினார்களோ அதே அளவிற்கு விக்ரம் படத்தில் கமல்ஹாசன் பல டெக்னாலஜியை பயன்படுத்தி எடுத்தார்.
ஆனால் அந்த படத்தினால் வந்த அதிர்ச்சி பேரதிர்ச்சிதான் ஆம் படம் படு தோல்வி. கமலின் மொத்த பணமும் விக்ரம் படத்திலேயே போனதுதான் மிச்சம். கமல்ஹாசனின் திறமையையும் ஆர்வத்தையும் பார்த்து அன்றைய காலத்தில் பலரும் புகழ்ந்தனர். ஆனால் விக்ரம் படத்தினால் அடைந்த நஷ்டத்தினால் எந்த ஒரு புது முயற்சியும் அவருடைய சொந்த செலவில் எடுப்பதில்லை.