ஹரி இயக்கத்தில் 2005ஆம் ஆண்டு வெளியாகி மிகப்பெரிய வரவேற்பைப் பெற்ற திரைப்படம் ஐயா. சரத்குமார் இரட்டை வேடங்களில் நடித்து வெளியான இந்த படம் வசூல் ரீதியாகவும் விமர்சக ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றது.
மேலும் நயன்தாரா அறிமுகமானது கூட இந்தப் படத்தில்தான். இந்த படத்தில் சரத்குமார் நடித்த ஐயாத்துரை கதாபாத்திரம் செம பிரபலம் ஆனது. ஆனால் முதலில் ஹரி இந்த கதையை சரத்குமாருக்காக எழுதவில்லையாம்.
முதல் முதலில் ஐயா படத்தில் நடிக்க இருந்தவர் முன்னணி நடிகர் கமலஹாசன் தானாம். தயாரிப்பாளர் ஞானவேல் ஹரியை அழைத்துச் சென்று இந்த கதையை முதன் முதலில் கமலஹாசனிடம் கூறினாராம்.
கமல்ஹாசனும் இந்த படத்தை தேவர் மகன் போல் பிரமாண்டமாக எடுக்கலாம் என்று கூறி முதலில் கதை விவாதத்தில் ஈடுபட்டாராம். பிறகு என்ன ஆனது என்று தெரியவில்லை. அந்த படத்திலிருந்து விலகி விட்டாராம் கமல்.
அதன்பிறகுதான் ஹரி சரத்குமாரை வைத்து இந்த படத்தை உருவாக்கியுள்ளார். ஹரியின் கதை எப்போதுமே ஒரு நடிகரை சார்ந்திருக்காது என்பதற்கு இந்த படம் ஒரு நல்ல உதாரணம். ஒரு காலத்தில் கதைக்கு முக்கியத்துவம் கொடுத்து நல்ல கமர்சியல் படங்களை எடுத்து வந்தார் ஹரி.
ஆனால் சமீபகாலமாக ஹீரோக்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து தன்னுடைய பிளஸ் என்ன என்பதை புரிந்து கொள்ளாமல் சிங்கம் 3, சாமி 2 போன்ற தோல்விப் படங்களைக் கொடுத்துள்ளார். எப்போதும் ஹரி படங்கள் வசனங்களுக்கு பெயர் போனது. ஆனால் இந்த இரண்டு படங்களின் வசனங்களை காதில் கேட்க முடியாத அளவுக்கு மிக மோசமாக இருந்தது குறிப்பிடத்தக்கது.