சனிக்கிழமை, ஜனவரி 18, 2025

ஐபிஎல் போட்டியை அதகளப்படுத்திய அணிகள்.. மொத்தம் இத்தனை சிக்ஸர்களா!

நடப்பாண்டு ஐபிஎல் போட்டிகள்  இம்மாதம் 9ஆம் தேதியிலிருந்து மே 30-ஆம் தேதி வரை நடக்க உள்ளது. கிட்டத்தட்ட அனைத்து அணிகளுமே தயாராகிவிட்ட நிலையில் போட்டியை எதிர்நோக்கி காத்துக் கொண்டிருக்கின்றனர் ரசிகர்கள்.

ஐபிஎல் போட்டி என்றாலே பவுண்டரிகளும், சிக்ஸர்கலும் பாரபட்சமில்லாமல் இருக்கும். அந்த வகையில் அதிக சிக்சர்களை அடித்த முதல் 5 அணிகளை பார்க்கலாம்,

மும்பை இந்தியன்ஸ்:

ஐந்து முறை ஐபிஎல் கோப்பையை வென்ற மும்பை இந்தியன்ஸ் அணி தான் அதிக சிக்ஸர்கள் அடித்த பட்டியலில் முதலிடத்தில் உள்ளது. இவர்களிடம் அடித்து ஆடக்கூடிய வீரர்கள் நிறைய பேர் உள்ளனர், ஹர்திக் பாண்டியா, கீரன் பொல்லார்ட், ரோகித் சர்மா போன்று சிக்சர்களை பறக்கவிடும் வீரர்கள் உள்ளனர். மும்பை அணியினர் மொத்தம் 225 போட்டிகளில் விளையாடி 1378 சிக்சர்கள் விளாசி உள்ளனர்.

Mumbaiindians-Cinemapettai.jpg
Mumbaiindians-Cinemapettai.jpg

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்:

மொத்தமாக இவர்கள் 211 போட்டிகளில்விளையாடி 1295 சிக்சர்களை அடித்து இரண்டாம் இடத்தில் உள்ளனர். விராத் கோலி, ஏபி டிவில்லியர்ஸ் போன்ற வீரர்களை கொண்டுள்ளது பெங்களூர் அணி .

RCB-Cinemapettai.jpg
RCB-Cinemapettai.jpg

சென்னை சூப்பர் கிங்ஸ்:

அதிக சிக்சர்களை அடித்த பட்டியலில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மூன்றாவது இடத்தில் உள்ளது. 202 போட்டிகளில் 1186 சிக்சர்களை அடித்திருக்கிறது. மூன்று முறை ஐபிஎல் கோப்பையையும் வென்றுள்ளது.

Chennaisuperkings-Cinemapettai.jpg
Chennaisuperkings-Cinemapettai.jpg

கொல்கத்தா நைட் ரைடர்ஸ்:

பாலிவுட் நடிகர் ஷாருக்கான் தான் கொல்கத்தா அணியின் ஓனர். 2012 ஆம் ஆண்டு மற்றும் 2014 ஆம் ஆண்டு என இரு முறை கோப்பையை வென்றுள்ளது கொல்கத்தா அணி .மொத்தம் 208 போட்டிகளில் 1096 சிக்சர்களை அடித்துள்ளது கொல்கத்தா அணி.

Kolkata-Cinemapettai.jpg
Kolkata-Cinemapettai.jpg

கிங்ஸ் லெவன் பஞ்சாப்:

ஒரு முறை கூட கோப்பையை வெல்லாத அணி பஞ்சாப்.தரமான வீரர்கள் பலர் இருந்தும் கோப்பையை வெல்ல முடியவில்லை. மொத்தம் 195 போட்டியில் விளையாடி 1094 சிக்சர்களை அடித்துள்ளது.

KIngs-Cinemapettai.jpg
KIngs-Cinemapettai.jpg

Trending News