ஞாயிற்றுக்கிழமை, டிசம்பர் 22, 2024

அடுத்த மேட்சில் அர்ஜுன் டெண்டுல்கர்.. சோதித்து பார்க்க இதுதான் நேரமா

ஐபிஎல் 2021 முதல் போட்டி நேற்று நடைபெற்றது. அதில் மும்பை அணி கடைசி ஓவரில் தோல்வியைத் தழுவியது. இதற்கு முக்கியமான காரணம் பேட்ஸ்மேன்கள் தான் 200 ரன்கள் அடிக்க வேண்டிய இடத்தில் 159 ரன்கள் மட்டுமே எடுத்தனர். இருந்தாலும் தங்களது பந்துவீச்சில் சாதித்து விடலாம் என்ற நம்பிக்கையுடன் இருந்த மும்பை அணி கடைசியில் தோல்வியைத் தழுவியது.

இதற்கு அடுத்த காரணம் பவுலிங்கில் உள்ள குளறுபடி. ராகுல் சாகர் நான்கு ஓவர்கள் போட்டு 43 ரன்களில் கொடுத்தார். அவர் போட்ட 4 ஓவர்களில் 4 டாட் பால்கள் மட்டுமே இருந்தது. இரண்டு சிக்சர்கள் வேறு கொடுத்துவிட்டார். அதிலும் விக்கெட் வேறு எடுக்கவில்லை. இதுவும் தோல்விக்கு காரணமாக இருந்தது.

அதனால் சாகருக்கு பதிலாக அர்ஜுன் டெண்டுல்கர் உள்ளே ஆட வைக்கலாம் என யோசித்து வருகிறார்கள். மேலும் அவருக்கு கடைசி நேரத்தில் வாய்ப்பு கொடுப்பது கடினம், ஆகவே ஆரம்பத்திலேயே கொடுத்து எப்படி பந்து வீசுகிறார் என்று பார்த்துவிட்டு அடுத்து வரும் மேட்சுகளில் கொடுக்கலாமா வேண்டாமா என்பதை முடிவு செய்வார்களாம்.

அர்ஜுன் டெண்டுல்கர்க்கு பல கிரிக்கெட் வீரர்கள் ஆதரவை தெரிவித்தாலும் ரசிகர்கள் மத்தியில் ஆதரவு இல்லை. சச்சின் டெண்டுல்கர் ஒருவருக்காக மட்டுமே அவரை அணியில் சேர்த்ததாக பலரும் கூறி வரும் நிலையில் அவருடைய திறமையை அர்ஜுன் டெண்டுல்கர் நிரூபித்தால் மட்டுமே அணியில் இடம் பெற முடியும்.

இதில் அர்ஜுன் டெண்டுல்கர்க்கு போட்டியாக பியுஷ் சாவ்லா, யுத்விர் சிங் ஆகியோர் இருக்கின்றனர். இதில் பியுஷ் சாவ்லா சற்று சீனியர் அதனால் அவருக்கும் வாய்ப்புகள் வழங்கப்படலாம். இதற்கிடையில் அர்ஜுன் டெண்டுல்கர் ஒரே ஒரு மேட்ச் மட்டுமே விளையாட வாய்ப்பு உள்ளதாம். அதில் அவர் நன்றாக விளையாடினால் மற்ற இருவருக்கும் வாய்ப்பு கிடைப்பது கடினம்.

arjun-tendulkar-speed
arjun-tendulkar-speed

நேரடியாக அர்ஜுன் டெண்டுல்கர் டி20 போட்டிகளில் பங்கு பெறுவதால் அவருடைய ஓவரை அடித்து வெளுக்கவும் வாய்ப்பு உள்ளது அதேநேரம் அவர் சிறப்பாக பந்துவீசி நல்ல பெயரை பெற்று ஒரு நாள் போட்டியிலும் பங்கு பெற வாய்ப்புள்ளது. அதனை இனி வரும் மேட்சுகளை பொறுத்துதான் கணிக்க முடியும்.

Trending News