சனிக்கிழமை, ஜனவரி 18, 2025

26 வயதிலே முடிவுக்கு வந்த இளம் வீரரின் கேரியர்.. ஐபிஎல் போட்டிகளிலும் வாய்ப்பு மறுப்பு!

2021ஆம் ஆண்டு ஐபிஎல் போட்டிகள் விறுவிறுப்பாக நடந்து வருகின்றது. கொல்கத்தா மற்றும் ஹைதராபாத் அணிக்கு இடையில் நடைபெற்ற போட்டியில் கொல்கத்தா அணி வெற்றி பெற்றது.

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்காக விளையாட இருக்கும் குல்தீப் யாதவ் அணியில் தனக்கென நிலையான இடத்தை தக்க வைத்துக்  கொள்ள முடியாமல் திணறிக் கொண்டிருக்கிறார். இவரின் மோசமான பார்ம் காரணமாக கடந்த சீசனிலும் கூட இவருக்கு  கொல்கத்தா அணியில் ஆடும் வாய்ப்பு கிடைக்கவில்லை. தொடர் முழுக்க வாய்ப்பு கிடைக்காமல் சிரமப்பட்டார்.

ஒரு காலத்தில் இந்திய அணியின்முக்கியமான லெக் ஸ்பின் பவுலர்களில் ஒருவராக பார்க்கப்பட்டவர் குல்தீப் யாதவ். சைனா மேன் ஸ்டைல் பவுலரான இவர் தொடக்கத்தில் அதாவது தோனி கேப்டனாக இருக்கும் போது சிறப்பாக பவுலிங் செய்து வந்தார்.

Kuldeep-Cinemapettai.jpg
Kuldeep-Cinemapettai.jpg

கடந்த இரண்டு வருடமாக பார்மில் இல்லாமல் கஷ்டப்பட்ட குல்தீப் தனக்கு கிடைத்த வாய்ப்புகளை கூட சரியாக பயன்படுத்திக்கொள்ளவில்லை. கோலி இவரை நம்பி முக்கியமான கட்டங்களில் வாய்ப்பு கொடுத்தும் கூட அதை காப்பாற்றிக்கொள்ளாமல் ஏமாற்றம் அளித்தார்.

தற்போது நடைபெற்று வரும் ஐபிஎல் தொடரிலும் இவருக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது அதற்கு காரணம் வலைப்பயிற்சியில் இவரது பவுலிங் மோசமாக இருந்ததால் தான் எனக் கூறுகிறார்கள். ஐபிஎல் மூலம் இவர் பார்மிற்கு திரும்பலாம் என்று நினைத்து நம்பிக்கையோடு இருந்தார். ஆனால் தற்போது இவரது கிரிக்கெட் கெரியரே முடியும் ஆபத்து ஏற்பட்டுள்ளது.

Trending News